’வெளிநாட்டில் திருமணம் செய்யாதீர்கள்..’ நாட்டு மக்களுக்கு மோடி கூறும் அறிவுரை என்ன?
பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதளத்தில் ஒரு செல்ஃபி மோடி வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், சுதேசி கொள்கைகள் குறித்து பேசியிருந்தார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
பிரதமர் நரேந்திர மோடி, சமிபத்தில் தன்னுடைய இன்ஸ்டா தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். தற்போது அவர், உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் பயணத்தின் ஒரு பகுதியாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டிற்காக பிரதமர் தற்போது பிஷ்கெக்கில் இருக்கிறார்.
பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.8 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இது குறித்து பேசி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. அப்போது, தற்சார்பை ஊக்குவிப்பதன் அவசியம் மற்றும் சுதேசிப் பொருட்களுக்கு (உள்நாட்டு பொருட்களுக்கு) அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார்.
“நீங்கள் பொழுதுபோக்கிற்காக வெளிநாட்டுப் பயணம் போகிறீர்கள் என்றால், அதை தவிர்த்து விடுங்கள். வெளிநாட்டில் திருமணம் செய்துகொள்கிறீர்கள் என்றால், அதை செய்யாதீர்கள். மேலும், அவசியமில்லாமல் தங்கம் வாங்கவும் கூடாது,” என்று பிரதமர் மோடி கூறினார்.
“நாம் எந்த அளவிற்கு சுதேசி மற்றும் தற்சார்பை முக்கியத்துவப்படுத்துகிறோமோ, அந்த அளவிற்கு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 100 வருடம் ஆவதற்குள் நம் நாட்டை மேம்பட்டதாக மாற்றி, இளைஞர்கள் கையில் கொடுப்போம்” என்றும் கூறியிருந்தார்.
ராகுல் காந்தியை சாடிய மோடி!
நரேந்திர மோடி, உலகில் அசாதரணமான சூழ்நிலைகளான போர், நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் வந்த போதிலும் இந்தியா இப்படிப்பட்ட அபரிபிதமான வளர்ச்சியை அடைந்திருப்பதாக கூறியிருக்கிறார். இது குறித்து விமர்சனங்களை வைப்பவர்கள் குறித்து பேசியிருக்கும் அவர், இந்தியாவில் இருப்பவர்களே ஒரு விரக்தியான சூழலில் மூழ்கி, பொய்களை பரப்புவதாக கூறினார்.
“இந்தியா பெரிதாக வளர்ச்சி அடைந்த போதிலும், இந்தியாவில் இருப்பவர்களே என்ன செய்வது என தெரியாமல் பொய்களை பரப்பி வருகின்றனர். இத்தனை சவால்களையும் தாண்டிய இந்தியா, 7.8% வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இதை நாம் தொடர வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இவர், பொய் பரப்புவர்கள் என கூறியது, ராகுல் காந்தியைத்தானோ என்கிற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.
இளைஞர்களின் எதிர்காலம்!
இந்தியாவின் இளைஞர்கள் கண்ட கனவு, பெரும் கடின உழைப்பினால் நிறைவேறும் என தெரிவித்திருக்கும் மோடி, நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து குடி மகன்களும் உதவ வேண்டும் என்றும் அரசு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும், அதற்கு பின் இருக்கும் நோக்கமும் சரியானது என்றும் தெரிவித்தார்.
சுதேசி இயக்கம் என்பது, சொந்த நாட்டில் தயாராகும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் முன்னுரிமை அளித்து, அந்நிய நாட்டு பொருட்களை புறக்கணிக்கும் இயக்கமாகவும், விடுதலை போராட்ட உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.
விடுதலை போராட்ட சமயத்தில், ஆங்கிலேயர்களின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில், வெளிநாட்டு பொருட்கள் மற்றும் ஆடைகளை இந்தியர்கள் புறக்கணிக்க செய்தனர்.
வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைத்து, உள்ளூர் வளங்களை கொண்டு, பொருளாதார சுயசார்பை அடைய, இந்த இயக்கம் மூலம் பலர் போராடினர்.
பிரதம் மோடி இப்போது எங்கே இருக்கிறார்?
கிரிகிஸ்தானில் இன்று SCO மாநாட்டில் பேசிய மோடி, போர்களம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை முடிக்க, பேச்சு வார்த்தை மட்டுமே ஒரே வழி என்று பேசி இருக்கிறார். நாம் அனைவரும் ஒரு மனதாக தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இருக்க வேண்டும் என்றும், அதற்கு பொருளாதார உதவி செய்வதை விடுத்து வேறோடு களைய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அப்போது அங்கே பாகிஸ்தானின் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷாரிஃப் உடனிருந்தார்.