SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'2024 மக்களவை தேர்தல் சட்டவிரோதம்... தேர்தல் ஆணையமே சொல்கிறது' - ராகுல் காந்தி கூறுவது என்ன?

Rahul Gandhi: 2024 மக்களவை தேர்தல் ஒரு சட்டவிரோத தேர்தல் என்றும் மக்களவைக்குள் நுழைந்தவர்கள், அதாவது பாஜகவினர் சட்டவிரோதமாக நுழைந்தனர் என்று தேர்தல் ஆணையமே சொல்கிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Written By Sudharsan G
Published: Oct 31, 2026, 07:38 PM IST | Updated: Oct 31, 2026, 07:46 PM IST
Join

Rahul Gandhi Latest News Updates: எஸ்ஐஆர் நடைமுறையில் குளறுபடிகள் நடந்ததாகவும், அதற்கு பொறுப்பேற்று தலைமை தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும், சில மாணவ அமைப்புகளும் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி, போராடி வருகின்றனர்.

அந்த வகையில், புதுடெல்லியில் உள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக அடையாள பதவிநீக்க விசாரணை நிகழ்வை இன்று (அக். 31) நடத்தினர்.

மக்களவையின் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் சபாநாயகர் மீரா குமார் சபாநாயகர் போன்று அந்த அவையை நடத்தினார். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க | Chalo Delhi Rally | நவம்பர் 1 'இந்தியா' கூட்டணி பேரணிக்கு 6 நிபந்தனைகளுடன் டெல்லி காவல்துறை அனுமதி!

தலைமை தேர்தல் ஆணையர் மீதான 6 குற்றச்சாட்டுகள்

மாதிரி பதவிநீக்க தீர்மானத்தை முன்மொழிந்து மல்லிகார்ஜுன கார்கே, தலைமை தேர்தல் ஆணையர் மீது 6 கடுமையான குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டார்.

ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும்

மேலும், கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "2023ஆம் ஆண்டு டிசம்பரில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டுவந்த சட்டம், தலைமை தேர்தல் ஆணையர் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கும் வகையில் அவருக்கு வாழ்நாள் பாதுகாப்பை அளித்துள்ளது.

இந்நாட்டின் அரசமைப்புக்கும் ஜனநாயகத்திற்கும் எதிராக அவர் ஆற்றிய குற்றங்களை மறைக்கவே அந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எங்கள் கூட்டணி, மக்கள் மற்றும் அரசமைப்புக்குத் துரோகம் இழைத்த ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கிறது" என வலியுறுத்தினார்.

மேலும் படிக்க | ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் விடுதலை! 8 ஆண்டு நீண்ட வழக்கில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

2024 தேர்தலே சட்டவிரோதமானது...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், "2024 மக்களவை தேர்தல் ஒரு சட்டவிரோத தேர்தல், மக்களவைக்குள் நுழைந்தவர்கள், அதாவது பாஜகவினர் சட்டவிரோதமாக நுழைந்தனர் என்றும் தேர்தல் ஆணையமே கூறுகிறது.

நான் ஒரு சிறிய விஷயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 13.3 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதாவது, ஒவ்வொரு ஏழு இந்தியர்களில் ஒருவர். இந்தியாவின் 15% வாக்காளர் நீக்கப்பட்டனர். கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த வாக்காளர்கள் வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிக்கும் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 3% ஆகும்.

எனவே, 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் வென்றார்கள். இப்போது அந்த வாக்காளர்களில் 15% பேர் வாக்களித்திருக்கவே கூடாது என்று தேர்தல் ஆணையமே கூறுகிறது. இதன் பொருள், 2024 மக்களவைத் தேர்தல் ஒரு சட்டவிரோத தேர்தல் என்றும், மக்களவைக்குள் தேர்தல் ஒரு சட்டவிரோத தேர்தல் என்றும் மக்களவைக்குள் நுழைந்தவர்கள், அதாவது பாஜகவினர் சட்டவிரோதமாக நுழைந்தனர் என்றும் தேர்தல் ஆணையமே கூறுகிறது" என்றார்.

நவம்பர் 1இல் பேரணி

எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைக்கு ஆளும் பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற நடைமுறைகளையும் அரசமைப்பு விதிகளையும் அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இந்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளதாக பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர். அண்மை காலமாக தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளுக்கு எதிராகப் எதிர்க்கட்சிகள் போராடி வரும் சூழலில், நாளை (நவ. 1) டெல்லியில் மாபெரும் பேரணியை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ராகுல் காந்தியின் வாகன அணியில் திடீர் விபத்து... பலர் காயம் -என்ன நடந்தது?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES