Ration Card News: தமிழகம் உட்பட அனைத்து மாநில மக்களுக்கும் ரேஷன் அட்டை ஒரு முக்கிய ஆவணமாக உள்ளது. இதன் மூலம் மலிவு விலையில் உனவுப் பொருட்களை வாங்க முடிவதோடு, அரசாங்க திட்டங்களுக்கான பலன்களும் தடையின்றி கிடைக்கின்றன.
ரேஷன் அட்டைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது பல புதுப்பித்தல்களை அளிக்கின்றன. இவற்றை பற்றிய புரிதல் இருக்க வேண்டியது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிக அவசியமாகும்.
தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. சில ரேஷன் அட்டைகளை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. இது அட்டைதாரர்களுக்கு ஒரு பெரிய பின்னடைவாக அமையும். ரேஷன் அட்டையை அரசு ரத்து செய்தால், அந்த குடும்பத்துக்கு அதன் பிறகு ரேஷன் பொருட்கள் கிடைக்காது. ஜார்க்கண்ட் உட்பட பல மாநில அரசுகள் இந்த முடிவை எடுத்துள்ளன. மற்ற மாநிலங்களும் இது குறித்து பரிசீலித்து வருகின்றன.
கடந்த ஆறு மாதங்களாக பொது விநியோகத் திட்ட (PDS) கடைகளில் ரேஷன் பொருட்களைப் பெறாத நபர்களின் அட்டைகளை ரத்து செய்ய ஜார்க்கண்ட் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இவர்கள் "செயலற்ற அட்டைதாரர்கள்" (silent cardholders) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அக்டோபர் 1 முதல் இத்தகைய அட்டைதாரர்களின் அட்டைகள் தற்காலிகமாக முடக்கப்படும்.
ஆதாவது, அக்டோபர் 1 முதல் இந்த அட்டைதாரர்களால் மலிவு விலையில் உணவு தானியங்களைப் பெற முடியாது என்பதாகும். ஆறு மாதங்களாக ரேஷன் பொருட்களைப் பெறாத அட்டைதாரர்கள் கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தங்கள் ரேஷன் பொருட்களைப் பெற்றுக்கொண்டால், அவர்களது அட்டைகள் முடக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"செயலற்ற அட்டைதாரர்கள்" குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தங்கள் ரேஷன் பொருட்களைப் பெறத் தவறினால், அக்டோபர் 1 முதல் அவர்களின் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும். பயனாளிகள் சரியான நேரத்தில் தகவல்களைப் பெறுவதை உறுதிசெய்ய, ஜார்க்கண்ட் அரசு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டது.
ஆயுஷ்மான் பாரத் போன்ற அரசு நலத்திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்காக மட்டுமே பலர் ரேஷன் அட்டைகளைப் பெற்றுள்ளனர், ஆனால் அவர்கள் PDS கடைகளில் இருந்து ரேஷன் பொருட்களைப் பெறுவதில்லை.
இத்தகைய அட்டைதாரர்களை அடையாளம் கண்டு அவர்களின் அட்டைகளை முடக்குவதற்கும், இதன் மூலம் முறைகேடான அல்லது செயலற்ற பயனாளிகளை நீக்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பிடத்தக்க வகையில், இத்தகைய "செயலற்ற" ரேஷன் அட்டைகளைத் தற்காலிகமாக முடக்குவது குறித்து மத்திய அமைச்சகம் அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், அடுத்த மூன்று மாதங்களுக்குள் அவற்றின் e-KYC-ஐ (மின்னணு வாடிக்கையாளர் விவர சரிபார்ப்பு) முடிக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஆறு மாதங்களாக PDS கடைகளில் ரேஷன் பொருட்களைப் பெறாத நபர்களின் ரேஷன் அட்டைகளைத் தற்காலிகமாக முடக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஜூலை 2025-ல் அறிவுறுத்தியிருந்தது.
இருப்பினும், செப்டம்பர் 21-க்குள் தங்கள் e-KYC-ஐ முடிக்காதவர்களுக்கு, அந்தச் செயல்முறையை நிறைவு செய்ய அக்டோபர் 1 முதல் ஜனவரி 1, 2027 வரை மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும். இந்தக் காலகட்டத்தில், அவர்கள் களச் சரிபார்ப்பு (field approval) மூலம் தங்கள் e-KYC-ஐ முடிக்க வேண்டியிருக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஜார்கண்ட் உட்பட சில மாநிலங்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களும் ரேஷன் பொருட்களுக்கான விநியோகத்தில் ஏற்படும் குளறுபடிகள் மற்றும் போலி பயனர்களைத் தடுக்க பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.