SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

விமான கடத்தல்..350 பேரை காப்பாற்றிய நீர்ஜா பற்றி தெரியுமா? 40 ஆண்டுக்கு பின் வரலாறு ரிபீட்..

1986 to 2026 : 40 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதே சம்பவமும்..இந்தியர்களின் துணிச்சலும்..இந்த கட்டுரை குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 02, 2026, 10:53 AM IST | Updated: Oct 02, 2026, 11:02 AM IST
Join

சமீபத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சார், 170க்கும் மேற்பட்டோர் உயிரை, காப்பாற்றிய விவரம் குறித்து அனைவரும் அறிந்திருப்போம். இந்த சமயத்தில், 40 வருடங்களுக்கு முன்பாக், இதே போல விமானத்தில் பயணித்த 350க்கும் மேற்பட்டோரின் உயிரை காப்பாற்றி இருக்கிறார். இவர் குறித்து ஒரு திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி:

சில நாட்களுக்கு முன்பு Flydubai எனும் FZ1073 விமானம், 174 பேருடன் சென்று கொண்டிருந்தது. அதை ஓட்டிய விமானிகளில் ஒருவர், அந்த விமானத்தை விபத்துக்குள்ளாக்க நினைத்தார். இதை இந்திய விமானியான ஸ்மித் மச்சார் சில பயணிகளின் உதவியுடன் தடுத்து நிறுத்தினார். அப்போது அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இருப்பினும், சவுதி அரேபியாவில், பயணிகள் அனைவரையும் பத்திரமாக இருக்கும் வகையில், Emergency Landing செய்தார். இதனால், அவரை தற்போது இந்திய பிரதமர் முதல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த சமயத்தில், பானோத் எனும் இன்னொரு ஹீரோ குறித்தும் அனைவரும் பேசி வருகின்றனர். இவர் யார்? இவர் செய்தது என்ன? என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

பானோத் செய்த வீரச்செயல்..!

1986, செப்டம்பர் 5ஆம் தேதியை அந்த விமானத்தில் ஏறியவர்களும், அவர்களுடன் விமான பணிப்பெண்ணாக ஏறிய பானோத்தும் அதை ஒரு சாதாரண நாளாகத்தான் நினைத்தார்கள். ஆனால், அந்த நாளில் நடக்கப்போகும் அசம்பாவிதங்கள் என்னென்ன என்பதை அப்போது அவர்கள் யாரும் அறியவில்லை.

மும்பையில் இருந்து நியூயார்க்கின் Frankfurt நோக்கி சென்று கொண்டிருந்தது Boeing 747, PanAm விமானம் 73. இந்த பயணத்தில், கராச்சியில் தரையிரங்கிய அந்த விமானத்தை, ஆயுதமேந்திய 4 பேர் கடத்தினர்.

பானோத்திற்கு, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது சட்டென புரிந்து விட்டது. உடனடியாக, விமான ஓட்டுநர் குழுவிற்கு, தகவல் தெரிவித்து, உடனடியாக விமானிகள் காக்பிட் வழியாக தப்பிக்க வழிவகை செய்தார். இதன்மூலம், இத்தனை பயணிகளுடன் விமானத்தை இயக்க முடியாத நிலைக்கு அந்த கடத்தல் காரர்கள் தள்ளப்பட்டனர். இதனால், 350 பயணிகளின் உயிர் அன்று காப்பாற்றப்பட்டது.

மேலும் படிக்க | விமானத்தில் கத்திக்குத்து... 174 உயிர்கள் தப்பியது எப்படி? இந்திய விமானியின் வீரதீர செயல் முழு பின்னணி - Explained

கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து பயணிகளை காப்பாற்ற முயற்சி நடந்த போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அப்போது மூன்று குழந்தைகளை நோக்கி சுடப்பட்டபோது அவர்களை காப்பாற்ற தானே கேடையமாக நின்ற பானோத், சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம், அவருடைய 23வது பிறந்தநாளுக்கு வெறும் இரண்டே நாட்கள் இருந்த நிலையில் நடந்தது.

பானோத்திற்கு, 1987ல் அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. இதன் மூலம், இந்தியாவின் மிக இளம் வயதில் இந்த விருதை வாங்கிய பெண்ணாக மாறினார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த சம்பவம் நடந்ததும், இதே செப்டம்பர் மாதத்தில்தான், முன்னர் குறிப்பிட்ட விமானியின் தாக்குதலால் விபத்தில் இருந்து விமானம் காப்பாற்றப்பட்டதும், இதே செப்டம்பர் மாதத்தில்தான். இதனால், பானோத் மற்றும் ஸ்மித் மச்சார் ஆகிய இருவரும் ரியல் லைஃப் ஹீரோக்களாக பார்க்கப்படுகின்றனர்.

பானோத் குறித்த திரைப்படம்..

பானோத்தின் முழு பெயர், நீர்ஜா பானோத் என்பதாகும். இவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டது. இதில், சோனம் கபூர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த படம் வந்த போது, மக்களால் வெகுவாக பாராட்டப்பட ஒன்றாகும்.

மேலும் படிக்க | மும்பையில் இன்று CJP போராட்டம் தொடக்கம்: போராட்ட சுவரொட்டிகளில் காந்தி படம்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES