• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /9.18 லட்சம் விவசாயிகளுக்கு தீபாவளிப் பரிசு... பயிருக்கு இழப்பீடு வழங்கிய மாநில அரசு

9.18 லட்சம் விவசாயிகளுக்கு தீபாவளிப் பரிசு... பயிருக்கு இழப்பீடு வழங்கிய மாநில அரசு

உத்தரப் பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்ட 9.18 லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ரூ.493 கோடி இழப்பீட்டுத் தொகை முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கினார்.

Written BySudharsan G
Published: Oct 12, 2026, 05:06 PM IST|Updated: Oct 12, 2026, 05:18 PM IST
joinshare
9.18 லட்சம் விவசாயிகளுக்கு தீபாவளிப் பரிசு... பயிருக்கு இழப்பீடு வழங்கிய மாநில அரசு
Image Credit: Crop damage compensation to UP farmers | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் விலகல்? CSK-வின் அடுத்த தலைமை யார்...?

கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் விலகல்? CSK-வின் அடுத்த தலைமை யார்...?

2

மக்களுக்கு அதிர்ச்சி! வேகமெடுக்கும் விலைவாசி.. செப்டம்பரில் பணவீக்கம் 5.54% ஆக உயர்வு

3

9.18 லட்சம் விவசாயிகளுக்கு தீபாவளிப் பரிசு... பயிருக்கு இழப்பீடு வழங்கிய மாநில அரசு

4

தவெகவில் பிரபல நடிகை? அவரே கொடுத்த விளக்கம்!

5

Explained | "ஜனநாயகத்தை காப்போம்" டெல்லியில் தொடங்கிய March for Democracy போராட்டத்தின் முழு பின்னணி

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நாட்டின் பல பகுதிகள் மழையின்றி வறட்சி நிலவுகிறது. உதாரணத்திற்கு மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 358 தாலுகாக்களில், 265 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என அறிவிக்கும்போது அரசின் பல்வேறு சலுகைகள் கிடைக்கும். இது ஒருபுறம் இருக்க, வட மாநிலங்களில் அதிக மழைப்பொழிவினாலும் விவசாயிகள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

மேலும் படிக்க | Explained | "ஜனநாயகத்தை காப்போம்" டெல்லியில் தொடங்கிய March for Democracy போராட்டத்தின் முழு பின்னணி

லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு நிவாரணம்

அந்த வகையில் இந்தாண்டு அதீத மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த உத்தர பிரதேச விவசாயிகளுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக விடிந்திருக்கிறது. மழை வெள்ளம் மற்றும் அதிக மழைப்பொழிவால் பயிர்களுக்கு ஏற்பட்ட கடும் சேதத்தை ஈடுசெய்யும் வகையில், லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெரும் நிவாரணத்தை இன்று வழங்கி உள்ளார்.

மொத்தம் 9 லட்சத்து 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 493 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் முதலீட்டு மானியங்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று வெளியிட்டுள்ளார். இந்த தொகை நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

பயிர்கள் சேதம்

உத்தர பிரதேசம் மாநிலத்தில்  சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம், அதீத கனமழை, புயல் மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக பல மாவட்டங்களில் விவசாய பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

வயல்களில் தண்ணீர் தேங்கியதால் நெல் உள்ளிட்ட முக்கிய பயிர்கள் சேதமடைந்தன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | ஜந்தர் மந்தரில் இனி போராட அனுமதி இல்லை... மூன்று முக்கிய காரணங்கள் என்னென்ன?

நிவாரணத் தொகை பகிர்வு

நிவாரண ஆணையர் அலுவலகத் தகவலின்படி, நடப்பு நிதியாண்டின் தொடக்கம் முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை கணக்கெடுக்கப்பட்டது. மொத்தமாக 9 லட்சத்து 19 ஆயிரத்து 91 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டனர்.

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், கோரக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  ரூ.493 கோடிக்கான நிவாரணத் தொகையை விடுவித்தார். இந்நிகழ்வில் மாநில வேளாண் துறை அமைச்சர் சூர்ய பிரதாப் சாஹி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

விவசாயிகள் தங்களின் அடுத்தக் கட்ட வேளாண் பணிகளை தடையின்றி தொடங்குவதற்கு இந்த நிதியுதவி பெரும் பலமாக அமையும்.

ஏற்கெனவே சேதத்திற்காக ஏற்கெனவே மாவட்டங்களுக்கு ரூ.169 கோடி விடுவிக்கப்பட்டிருந்தது. அதில் 1,29,326 விவசாயிகளுக்கு முதற்கட்டமாக ரூ.78.75 கோடி மானியமாக வழங்கப்பட்டுவிட்டது.
பிற பேரிடர் இழப்புகளுக்கான நிவாரணம்

பயிர் சேதத்திறகு மட்டுமல்லாமல், இயற்கை பேரிடரின் போது ஏற்பட்ட உயிரிழப்பு, கால்நடைகளின் இழப்பு மற்றும் வீடுகளின் சேதத்திற்கும் மாநில அரசு இழப்பீடு வழங்கி உள்ளது.

பல்வேறு பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை ரூ.225.93 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டிருப்பதாக மாநிலத்தின் நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | பல ஆண்டுகள் போராட்ட சின்னமாக இருந்த ஜந்தர் மந்தர் மூடல்.. டெல்லி போலிஸ் முடிவால் புதிய சர்ச்சை
 

Add Zee News as a Preferred Source
TAGS:
India