SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

என்னை கொல்ல சதி, பெண்களுடன் தொடர்பு.... கணவர் மீது அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!!

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா பகீர் குற்றச்சாட்டு. தனது அரசு இல்லத்தில் பணியாளர்கள் முன்னிலையில், தனது கணவர் சாஹு தன்னைச் சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாக ஆர்யா குற்றம் சாட்டியுள்ளார்.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 17, 2026, 09:33 AM IST | Updated: Oct 17, 2026, 09:48 AM IST
Join

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா, தனது கணவர் கிரிதாரி லால் சாஹு மீது காவல் நிலையத்தில் புகார் (FIR) அளித்துள்ளார். அவர் மீது தாக்குதல் நடத்தியது, சாதி ரீதியாக அவதூறாகப் பேசியது மற்றும் தன்னைக் கொல்லச் சதி செய்தது போன்ற குற்றச்சாட்டுகளை ரேகா ஆர்யா முன்வைத்துள்ளார்.

மேலும், தனது கணவர் ஏற்கனவே ஒரு திருமணம் செய்துகொண்டதை மறைத்ததாகவும், பிற பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வியாழக்கிழமை முகநூலில் (Facebook) காணொளி ஒன்றை வெளியிட்ட அவர், அதில் கண்ணீர் மல்க இந்தக் குற்றச்சாட்டுகளை விவரித்திருந்தார். அதன் பிறகு, டேராடூனில் உள்ள கிருஷ்ணா மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

சாதி ரீதியாக கணவர் இழிவுபடுத்தினார்: அமைச்சர் குற்றச்சாட்டு

தனது அரசு இல்லத்தில் பணியாளர்கள் முன்னிலையில், தனது கணவர் சாஹு தன்னைச் சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாக ஆர்யா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சில நிறுவனங்களின் இயக்குநர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது போலக் காட்ட, தனது கையொப்பத்தைப் போலியாகப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

டேராடூனில் உள்ள கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், குற்றச் சதி, மோசடி, ஆவணங்களை போலியாகத் தயாரித்தல், இருதார மணம், கணவரால் துன்புறுத்தப்படுதல், காயப்படுத்துதல், அவமதித்தல் மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனுடன், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இது தவிர, இரண்டு ஒலிப்பதிவுகளையும் ஆர்யா வெளியிட்டுள்ளார். தனது புகாரில், சாஹு ஒரு பெண்ணிடம் பேசும் ஒலிப்பதிவு ஒன்று தனக்குக் கிடைத்ததாகவும், அதில் அவர் தன்னைக் கொல்லச் சதி செய்வது போன்ற உரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | நேஹா போரா விடுவிப்பு... அபிஜித் தீப்கே கைது - டெல்லியில் பரபரப்பு

குற்றங்களை மறுத்த அமைச்சரின் கணவர்

வெள்ளிக்கிழமையன்று இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அமைச்சர் ரேகா ஆர்யாவின் கணவர் சாஹு அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். மேலும் அவர் அமைச்சர் ரேகா ஆர்யா மீது ஊழல் மற்றும் தனது தொகுதியான அல்மோரா மாவட்டத்தின் சோமேஷ்வர் பகுதியில் நிர்வாக ரீதியான அலட்சியம் காட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

டேராடூன் நகர காவல் கண்காணிப்பாளர் சேகர் சந்த் சுயால் கூறியதாவது:

"புகாருடன் சேர்த்து சில ஆதாரங்களும் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன; அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும். விசாரணையின் போது கண்டறியப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்."

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குரிய சம்பவங்கள், ஜூலை 6, 2004 முதல் அக்டோபர் 15, 2026 வரையிலான நீண்ட கால இடைவெளியில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய சாஹு, கடந்த 10 ஆண்டுகளாக ரேகா ஆர்யாவின் துறைகளில் நடக்கும் ஊழல்களைத் தான் சுட்டிக்காட்டி வந்ததாகக் கூறினார். மேலும், அந்த ஒலிப்பதிவுகள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க | 16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

அமைச்சரின் கணவர் சாஹு காணொலியில் கூறியதாவது:

“அவரது துறைகளில் ஊழல் நடப்பதாகவும், இவ்வளவு பெரிய தொகையின் தேவை அங்கு இல்லை என்றும் நான் அவரிடம் பலமுறை கூறினேன். அவர் என் பேச்சைக் கேட்கவே இல்லை. இது தொடர்பாக அவருடன் வாக்குவாதமும் செய்திருக்கிறேன்... ஊழலில் ஈடுபட வேண்டாம் என்று நான் எப்போதும் அவரிடம் கூறி வந்தேன்... அமைச்சரவையில் இன்னும் பல அமைச்சர்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் யாருடைய பெயரும் ஊழலுடன் அடிபடவில்லை. ஆனால், உங்கள் பெயர் நாடு முழுவதும் ஊழலுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது. நீங்கள் ஊழலின் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டீர்கள்,”

உத்தரப் பிரதேசத்தின் பரேலியைச் சேர்ந்த சாஹு, உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். ஆர்யா மீது தான் ஏற்கனவே முதலமைச்சரிடம் ஊழல் புகார் அளித்திருந்ததாகவும், அவரிடம் ஆர்யாவுக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏதேனும் ஒரு விசாரணை அமைப்பின் மூலம் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஆர்யா 210 கோடி ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துகளைச் சேர்த்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். “இது குறித்து உத்தரகண்டில் விரிவான செய்தியாளர் சந்திப்பை நடத்தப்போகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | பிரம்மாண்டமான IPO-ஐ அறிமுகப்படுத்த தயாராகும் ரிலையன்ஸ் ஜியோவிடம் ஜீ மீடியா முன்வைத்த 14 கேள்விகள்!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES