SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் மாணவிகள்... கிராமங்களில் நிலை மோசம்.. ஷாக் ரிப்போர்ட்!

Education Gender Gap Explained: இந்தியாவில் கல்வி பாலின இடைவெளி நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவிகளை விட மாணவர்களை 10ம் வகுப்பிற்கு மேல் படித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

Written By Umabarkavi K
Published: Oct 11, 2026, 06:18 PM IST | Updated: Oct 11, 2026, 06:36 PM IST
Join

Education Gender Gap Explained: நாட்டிலேயே கல்வியில் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. குறிப்பாக, பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இடைநிற்றலை தடுக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இப்படியாக இருக்கும் நிலையில், இந்தியாவில் மாணவர்கள், மாணவிகளுக்கமான கல்வி இடைவெளி குறைந்து வருவதாக ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, நாட்டில் 54.6 சதவீதம் மாணவர்கள், 46.4 சதவீதம் மாணவிகள் 11,12ஆம் வகுப்பு என பள்ளிப்படிப்பை முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியாவில் நகர்ப்புறங்களில் 64 சதவீதம் மாணவர்களும், 61.5 சதவீதம் மாணவிகளும் 10ம் வகுப்பு வரை படித்துள்ளனர். இங்கு பாலின இடைவெளி வெறும் 2.5 சதவீதத்தை  மட்டுமே காட்டுகிறது. அதே நேரத்தில்,  இந்தியாவில் கிராமப்புறங்களில் 49.9 சதவீத மாணவர்களும், 39.7 சதவீத மாணவிகளும் 10ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர். இங்கு பாலின இடைவெளி 10.2 சதவீதப் புள்ளிகளாக உள்ளது. இது நகரங்களின் இடைவெளியை விட நான்கு மடங்கு அதிகம் என்பதை காட்டுகிறது.

மாநில வாரியான விவரம்

நாட்டின் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நகர்ப்புற மாணவர்களை விட நகர்ப்புற மாணவிகள் 10ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர்.  இந்த பட்டியலில் சிக்கிம் மாநிலம் முதலிடத்தில் உள்ளனர்.

அதே நேரத்ல் கிராமப்புறங்களைப் பொறுத்தவரை வெறும் 3 மாநிலங்களில் மட்டுமே கிராமப்புறப் மாணவர்களை விட மாணவிகள் பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர். அதன்படி,

கேரளா:  4.5 சதவீத மாணவிகள் 10ம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர்.

சிக்கிம்:  4.3 சதவீத மாணவிகள் 10ம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர்.

மேகலாயா: 3.2 சதவீத சதவீத மாணவிகள் 10ம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர்.

மேலும் படிக்க: விமானத்திலேயே அபிஜீத் திப்கே கைது... இன்ஸ்டா லைவ்வால் பரபரப்பு - நடந்தது என்ன?

வட மாநிலங்களில் நிலைமை மோசம்

பீகார்: நகர்ப்புறங்களில் மாணவிகள் 51.9 சதவீதமும், மாணவர்கள் 51.3 சதவீதமும் பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர். ஆனால், கிராமப்புறங்களிலோ மாணவர்கள் 44.6 சதவீதமும், மாணவிகள் 30.6 சதவீத மாணவிகளும் பள்ளிப்படிப்பை முடித்திருக்கின்றனர். இதில் பாலின வேறுபாடு என்பது 14 சதவீதத்தை காட்டுகிறது.

உத்தர பிரதேசம்: நகர்ப்புறங்களில் மாணவர்களை விட 1.7 சதவீதத்திற்கு மேல் மாணவிகள் பள்ளிப்படிப்பை முடித்த நிலையில், கிராமப்புறங்களில் மாணவிகளை விட மாணவர்கள் 8.8 சதவீதத்திற்கு அதிகமானோர் பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர்.

புதுச்சேரி: புதுச்சேரியில், நகர்ப்புற இடைவெளி கிட்டத்தட்ட இல்லை. ஆனால், கிராமப்புறங்களில் மாணவிகளை விட மாணவர்கள் 15.1 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பை முடித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

காரணம் என்ன?

கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு, கல்விக்கான வசதி அங்கு வாழும் அனைத்து மக்களையும் பாதிக்கின்றன. கிராமப்புற மாணவியை விட, 21.8 சதவீத நகர்ப்புற மாணவியை 10ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை முடிக்கின்றனர்.அதே நேரத்தில், கிராமப்புற மாணவர்களை விட, 14.1 சதவீதம் நகர்ப்புற மாணவர்கள் 10ம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை முடிக்கின்றனர். அதாவது, கிராமப்புறங்களில் நிலவும் கல்விப் பற்றாக்குறை ஆண்களை விடப் பெண்களை ஒன்றரை மடங்கு அதிகமாகப் பாதிக்கிறது. 

நகர்ப்புறங்களில் இருந்து விலகி கிராமங்களை நோக்கிச் செல்லச் செல்ல, ஆண் - பெண் கல்வி இடைவெளி அதிகரிப்பதற்கு இதுவே மிக முக்கியக் காரணமாகும்.  போக்குவரத்து போன்ற சொந்த வசதிகளைச் செய்து பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய சூழல் வரும்போதுதான் பெண்கள் 10ம் வகுப்பிற்கு பிறகு படிப்பது குறைகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தேசியக் குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு (NFHS)-6 தரவுகளின்படி, பெண் குழந்தைகள் கல்வியை தொட முடியாமல் போவதற்கு அருகிலேயே மேல்நிலைப் பள்ளிகள் இல்லாததே மிக முக்கியமான தடையாக உருவெடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்து. தூரத்தில் மேல் நிலைப்பள்ளிகள் இருப்பது பெண் குழந்தைகளுக்கு போக்குவரத்து போன்ற தனிப்பட்ட வசதிகளை கிராமப்புற மாணவிகளுக்கு சிரமமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: அபிஜீத் திப்கே விடுதலை... ஆனால் நீதிமன்றம் போட்ட முக்கிய நிபந்தனை - போராட்டம் தொடருமா?

எடுத்துக்காட்டாக திகழும் கேரளா

கேரளாவில் கிராமப்புறப் பெண்களில் 84.6% பேர் 10ம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட பள்ளிக் கல்வியை நிறைவு செய்துள்ளனர். ஆனால், பீகார் மற்றும் குஜராத்தின் நகர்ப்புறப் பெண்களில் 51.9% பேரும், மேற்கு வங்கத்தில் 52.1% பேரும், ராஜஸ்தானில் 52.9% பேரும் மட்டுமே 10ம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட பள்ளிக் கல்வியை முடித்துள்ளனர். 

அதாவது, கேரளாவில் கிராமத்தில் வாழும் ஒரு பெண், பீகாரில் நகர்ப்புறத்தில் வாழும் பெண்ணை விட 30 சதவீதப் புள்ளிகளுக்கும் மேல் கூடுதல் கல்வி அறிவைப் பெற்றுள்ளார். கேரள மாநிலத்தில் நகர்ப்புறப் பெண்களின் கல்வி விகிதம் 88.7% ஆகவும், கிராமப்புறப் பெண்களின் கல்வி விகிதம் 84.6% ஆகவும் உள்ளது.

இங்கு நகரம் மற்றும் கிராமங்களுக்கு இடையிலான இடைவெளி வெறும் 4.1 சதவீதப் புள்ளிகள் மட்டுமே. கேரளாவைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம் (6.6 புள்ளிகள்), புதுச்சேரி (6.8 புள்ளிகள்) மற்றும் கோவா (6.9 புள்ளிகள்) ஆகிய மாநிலங்களும் நகர்ப்புற-கிராமப்புற பெண் கல்வி இடைவெளியைக் கணிசமாகக் குறைத்துள்ளன. கேரளா, இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மாணவிகள் எளிதில் செல்லக் கூடிய வகையில், அருகிலேயே மேல்நிலைப் பள்ளிகள் இருப்பதே மாணவிகள் அதிகம் பேர் படிப்பதற்கு முக்கியமான காரணம் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES