கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி விருது வழங்கி வருகிறார் விஜய். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னரும் இதனை தொடர்கிறார். அதன்படி, இந்தாண்டு நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட விழாக்கள் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய், மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர் முன்னிலையில் பாராட்டு சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் வழங்க உள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான என். ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே நவம்பர் 04 ஆம் தேதி முதல் கட்ட பாராட்டு விழா நடைபெற்ற நிலையில், அடுத்த இரண்டு கட்டங்களிலும் மொத்தம் 9 மாவட்டங்களை சேர்ந்த 61 சட்டமன்ற தொகுதிகளின் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இரண்டாம் கட்ட பாராட்டு விழா வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இதில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 31 சட்டமன்ற தொகுதிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்பட உள்ளனர்.
கோவை (10 தொகுதிகள்): மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி).
ஈரோடு (8 தொகுதிகள்): ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம், பவானிசாகர் (தனி).
திருப்பூர் (8 தொகுதிகள்): தாராபுரம் (தனி), காங்கேயம், அவினாசி (தனி), திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்.
நீலகிரி (3 தொகுதிகள்): உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர்.
பெரம்பலூர் (2 தொகுதிகள்): பெரம்பலூர் (தனி), குன்னம்.
மூன்றாம் கட்ட நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 30 சட்டமன்ற தொகுதிகளின் மாணவர்கள் பாராட்டப்பட உள்ளனர்.
சேலம் (11 தொகுதிகள்): கங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (பழங்குடியினர்), ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி.
நாமக்கல் (6 தொகுதிகள்): இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (பழங்குடியினர்), நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம்.
கரூர் (4 தொகுதிகள்): அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை.
திருச்சி (9 தொகுதிகள்): மணப்பாறை, திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி).
விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது பெற்றோருடன் காலை 11 மணிக்குள் அரங்கிற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். மேலும், விழாவில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு மதிய உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலைய செயலகம் தெரிவித்துள்ளது.