• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: இன்று (நவ., 25) புதன் பகவான் விசாகம் நட்சத்திரத்திற்கு இடம்பெயர்ந்துள்ளதால் 4 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல சாதகமான பலன்கள் கிடைக்கவுள்ளன.

Written ByR Balaji
Published: Nov 25, 2026, 18:46 IST|Updated: Nov 25, 2026, 18:50 IST
joinshare
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, நவகிரகங்களில் புதன் கிரகம் அறிவாற்றல், கல்வி, பேச்சுத்திறன் மற்றும் வணிகம் ஆகியவற்றை குறிக்கிறது. கிரகங்களிலேயே வேகமாக ராசி மாறக்கூடிய புதன் தற்போது துலாம் ராசியில் சஞ்சரித்து வருகிறது. மேலும், சுவாதி நட்சத்தில் பயணித்து வந்தார். இந்த நிலையில், இன்று (நவம்பர் 25) புதன் விசாகம் நட்சத்திரத்திற்கு இடம்பெயர்ந்துள்ளார்.

விசாகம் நட்சத்திரத்தின் அதிபதியாக குரு பகவான் உள்ளார். புதனின் இந்த நட்சத்திர மாற்றம் 12 ராசிகளிலும் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்தினாலும், சில குறிப்பிட்ட ராசிகளில் மட்டும் பல சாதகமான பலன்களை வழங்க இருக்கிறது. பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைப்பது, தொழில் வளர்ச்சி ஏற்படுவது, வருமானம் அதிகரிப்பது போன்ற முன்னேற்றங்கள் உண்டாகலாம். அப்படி, புதனின் இந்த நட்சத்திர மாற்றத்தால் சிறப்பான பலன்களை பெற இருக்கும் 4 ராசிகள் குறீத்து இங்கு பார்க்கலாம்.

ரிஷபம் (Taurus Zodiac Signs)

ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர மாற்றம் குடும்பத்திலும் பணியிடத்திலும் சாதகமான மாற்றங்களை கொண்டு வரலாம். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவ வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், தொழில் மற்றும் வேலை சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கலாம். இருப்பினும் மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. நிதானமாக செயல்பட்டால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

மிதுனம் (Gemini Zodiac Signs)

மிதுன ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர மாற்றம் சாதகமான சூழலை உருவாக்கக்கூடும். தொடங்கும் காரியங்களில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நண்பர்களின் மற்றும் நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிர்ஷ்டமும் கைகொடுப்பதால், தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட நல்ல லாபம் கிடைக்கலாம். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் சாதகாமான காலமாக அமைய வாய்ப்புள்ளது.

கன்னி (Virgo Zodiac Signs)

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சி பல்வேறு நன்மைகளை தரக்கூடும்., குறிப்பாக, தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகலாம். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கக்கூடும். இதனால் பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறையலாம். ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை திட்டமிட்டு விரைவாக முடித்து மேலதிகாரிகளின் பாராட்டை பெறலாம்.

மீனம் (Pisces Zodiac Signs)

மீன ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அளிக்கக்கூடும். குறிப்பாக, தொழில் சார்ந்த முடிவுகளை அவசரப்படாமல் நன்கு ஆலோசித்து எடுப்பது நல்ல பலன்களை தரும். பணியிடத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணையின் ஆதரவும்  கிடைக்கக்கூடும். இதனால், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் சார்ந்த் செயல்பாடுகளிலும் முன்னேற்றம் ஏற்படலாம்.

(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan