SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : 5 முறை நாமினேட் செய்தும்..மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காதது ஏன்?

மகாத்மா காந்தியை போற்றும் வகையில், அக்டோபர் 2ஆம் தேதியான இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், அவருக்கு ஏன் 5 முறை நாமினேட் செய்யப்பட்டும் நோபல் பரிசு கிடைக்கவில்லை என்பதை பார்ப்போமா?

Written By Yuvashree M
Published: Oct 02, 2026, 06:22 PM IST | Updated: Oct 02, 2026, 06:29 PM IST
Join

20ஆம் நூற்றாண்டில், பல்வேறு நாடுகளில் அகிம்சை போராட்டத்திற்கு பெரிய முகமாக இருப்பவர்தான், மகாத்மா காந்தி. இவருடைய சத்தியாகிரகம்தான், இந்தியா சுதந்திரம் வாங்க காரணமாக இருந்தது. இருப்பினும், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவே இல்லை.

5 முறை நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவர்!

மகாத்மா காந்தியை, ஒருமுறையல்ல இருமுறையல்ல, 5 முறை நோபல் பரிசுக்காக நாமினேட் செய்திருக்கின்றனர். முதல் முறை அவரை நாமினேட் செய்தது, 1937ஆம் ஆண்டில்தான், இதைத்தொடர்ந்து 1938, 1939, 1947 மற்றும் 1948 உள்ளிட்ட ஆண்டுகளில் நார்வீகன் நோபல் குழுவினரால் நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார். இருப்பினும், இவருக்கு தொடர்ந்து நோபல் பரிசு கிடைக்காமல்  இருந்தது, நோபல் குழுவினர் மீது, மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த 1989ஆம் ஆண்டு, தலாய் லாமா, அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். அப்போது அந்த குழுவின் தலைவர், இந்த நோபல் பரிசு, மகாத்மா காந்தியின் நினைவாக அவருக்கு மரியாதை செலுத்தும் வகையின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

முதல்முறை காந்தியை நாமினேட் செய்தபோது என்ன ஆனது?

காந்தியை Ole Colbjornsen என்பவர், 1937ஆம் ஆண்டு முதன்முறையாக நோபல் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டார். இவர், நார்வீகன் நாடாளுமன்றத்தின் நோபல் பரிசு குழுவின் முக்கிய உருப்பினர்களுள் ஒருவர். அந்த ஆண்டில் நோபல் பரிசுக்கு தகுதியுடையவர்களாக அந்த ஆண்டில், 13 பேர் இருந்தனர்.

இந்த சமயத்தில் மகாத்மா காந்தி தன்னுடைய அரசியல் நிலைபாடு அகிம்சைதான் என்பதை கூறியிருந்தார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்காகப் பிரச்சாரம் செய்தபோது சத்தியாகிரகம், அல்லது 'உண்மை சக்தி' என்பதை அவர் வளர்த்தெடுத்திருந்தார்; பின்னர், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அகிம்சை எதிர்ப்பைப் பயன்படுத்தினார்.

இதனை, நோபல் பரிசு குழுவின் ஆலோசகர் பேராசியரிய ஜேக்கப் வார்ம் முல்லர், அங்கீகரித்தார். மேலும், அவரை உன்னதமான மனிதர் என்றும், துறவு மனப்பான்மை கொண்ட் நபர் என்றும், இந்திய பொது மக்களால் தகுதியுடன் மதிக்கப்பட்டு நேசிக்கப்படும் ஒரு முக்கிய மனிதர் என்றும் தெரிவித்தார்.

இருப்பினும், காந்தியின் கொள்கைகளில் திடீர் திருப்பங்கள் ஏற்படுவதாகவும், அவற்றை அவருடைய ஆதரவாளர்கள் திருப்திகரமாக விளக்க இயலாது என்றும் கூறியிருக்கிறார். மேலும், ஒரு சமயம் அவர் ஒரு மதத்தை சேர்ந்தவர் போல இருப்பதாகவும், பின்னர் திடீரென ஒரு சாதாரண அரசியல்வாதியாக மாறிவிடுவதாகவும் தெரிவித்தார்.

1937ல், அமைதிக்கான நோபல் பரிசு செல்வுட் பிரபு சிசிலுக்கு வழங்கப்பட்டது. கோல்ஃப் ஜோர்ன்சென், 1938 மற்றும் 1939ஆம் ஆண்டுகளில் மீண்டும் கந்தியை அவர் பரிந்துரைத்தார். ஆனால், அவர் நோபல் பரிசை பெறவில்லை.

மேலும் படிக்க | விமான கடத்தல்..350 பேரை காப்பாற்றிய நீர்ஜா பற்றி தெரியுமா? 40 ஆண்டுக்கு பின் வரலாறு ரிபீட்..

1947ல் என்ன நடந்தது?

இந்தியா, பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு 1947ல் சுதந்திரம் பெற்றது. இந்த ஆண்டில் மீண்டும் காந்தி நோபல் பரிசுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றிருந்தார். இவருக்கான பரிந்துரைகள், நார்வே வெளியுறவு அலுவலகம் வழியாக, இந்தியாவிலிருந்து வந்தன. மேலும், இறுதி பட்டியலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு நாமினேட் செய்யப்பட்டவர்களுள் அவரும் ஒருவர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி குறித்து எழுதப்பட்ட கணிப்பு, இப்போது சாதகமாக மாறியிருந்தது. இந்த சமயத்தில் வேறு ஒரு பிரச்சனை எழுந்தது.

பிரிடிஷ் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் காந்தியின் பங்கு, இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் பங்கேறு, இந்து முஸ்லீம் மோதல் ஆகியவை, வரலாற்றாசிரியர் ஜென்ச் அருப்பால் ஆய்வு செய்யப்பட்டது. நோபல் பரிசு வழங்கியவரின் கூற்றின் படி, காந்தி தன்னுடைய அகிம்சை கொள்கையை விடாமல், இந்த மோதல்களில் அதை தொடந்து கடைப்பிடித்து வந்தார் என்று  கூறுகிறார்.

1947ல் பிரிவினையையும், பரவலான வன்முறையையும் கொண்டு வந்தது, புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்த நிலையிலேயே இருந்தன. இது, அப்போதைய நோபல் குழு உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய கருத்தாக அமைந்தது.

இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், காந்திக்கு நோபல் பரிசை வழங்க மார்டின் டிரான்மெல் தயக்கம் காட்டினார். அதே சமயத்தில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிர்கர் பிராட்லாண்ட் அவருடன் உடன்பட்டார். நோபல் குறிப்பின்படி, மோதலில் ஈடுபட்ட இரு தரப்பிலும் காந்தி மிகவும் வலுவாக இருந்தார்.

காந்தியின் இறுதி நோபல் பரிந்துரை!

1948ல், ஜனவரி 30ஆம் தேதி அந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைக்கான காலக்கெடுவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, காந்தி சுட்டு படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் நோபல் பரிசு பெற்றவர்கள் உள்பட அவரை பரிந்துரைத்து, 6 கடிதங்களை அக்குழு பெற்றது.

காந்தியின் மரணம், ‘மரணத்திற்கு பிறகும் நோபல் அமைதி பரிசை வழங்க முடியுமா?’ என்ற கேள்வியை எழுப்பியது. இதற்கு முன்னர், யாரும் மரணத்திற்கு பின் நோபல் அமைதி பரிசை பெற்றதில்லை. இருப்பினும், இக்காலத்தில் நடைமுறையில் இருந்த நோபல் அறக்கட்டளையின் சட்ட விதிகள், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் மரணத்திர்கு பின்னரும், நோபல் பரிசு வழங்க அனுமதித்தன.

பின்னர், 1948ஆம் ஆண்டு, நவம்பர் 18ஆம் தேதியன்று, தகுதியான உயிருள்ள வேட்பாளர் யாரும் இல்லை எனும் காரணத்தை தெரிவித்து, அந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டாம் என்று நார்வே நோபல் பரிசு குழு முடிவு செய்தது. இது குறித்து, ஸ்வீடிஷ் பரிசு வழங்கும் குழு தெரிவிக்கையில், நோபல் பரிசு வழங்கும் குழு ஒரு முடிவை எட்டும் முன்னர், அந்த நபர் இறந்திருந்தால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படாது என்று குறிப்பிட்டது. இப்படித்தான் மகாத்மா காந்திக்கு 5 முறையும் அமைதிக்காான நோபல் பரிசு பரிந்துரைக்கப்பட்டும் கிடைக்காமல் போனது.

மேலும் படிக்க | இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தை காந்தி புறக்கணித்தது ஏன்? இதுதான் காரணமா..?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES