சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் வரும் நவம்பர் 14இல் தொடங்க உள்ள நிலையில், சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள 14 வீரர்கள் யார் யார்...?, அவர்கள் எந்தெந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்...? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
இந்தியாவின் உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் வரும் நவம்பர் 14ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 6ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
1/6
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் 2026
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் வரும் நவம்பர் 14ஆம் தேதி (சனி) தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. எலைட் மற்றும் பிளேட் என 38 அணிகள், 141 போட்டிகள், நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் என இந்தியாவின் உள்நாட்டு டி20 தொடரான இது இளம் வீரர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
2/6
வீரர்களுக்கு அதிமுக்கியம்
ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற இருக்கும் சூழலிலும், வரும் நவம்பர் 17ஆம் தேதி வீரர்கள் தக்கவைப்பு (IPL Players Retention) இருப்பதாலும் முதல் லீக் போட்டியிலேயே அதிரடி காண்பித்து கவனம் ஈர்க்க ஒவ்வொரு வீரர்களும் முயற்சிப்பார்கள்.
3/6
ஐபிஎல் அணிகளுக்கும் இத்தொடர் முக்கியம்
ஐபிஎல் தொடரை பொருத்தவரை ஒவ்வொரு அணிகளும் தற்போது டிரேட் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகின்றன. அதேநேரத்தில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை தயாரிக்கவும் முழு வீச்சில் செயலாற்றி வருகின்றனர். அவர்களுக்கும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் பெரியளவில் உதவும்.
4/6
SMAT தொடரை நேரலையில் காணலாம்
வீரர்களுக்கும், ஐபிஎல் அணிகளுக்கும் மட்டுமின்றி ரசிகர்களுமே சையத் முஷ்டாக் அலி கோப்பையை அதிக எதிர்பார்ப்புடன் பார்ப்பார்கள். தங்களுக்கு பிடித்தமான அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விளையாடுவதை பார்க்கவும், தங்களுக்கு பிடித்த அணி ஏலத்தில் எடுக்க வேண்டிய வீரர்கள் விளையாடுவதை பார்க்கவும் ரசிகர்கள் விரும்புவார்கள். Jio Hotstar தளத்திலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் SMAT தொடரின் சில போட்டிகளை நேரலையில் காணலாம்.
5/6
14 சிஎஸ்கே வீரர்கள்
அந்த வகையில், சிஎஸ்கே வீரர்கள் யார் யார் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடுகிறார்கள், அவர்கள் எந்த அணியில் இடம்பெற்றுள்ளனர் உள்ளிட்டவற்றை இதில் காணலாம். மொத்தம் 14 சிஎஸ்கே வீரர்கள் SMAT தொடரில் விளையாடுகின்றனர். அதில், ருதுராஜ் கெய்க்வாட் (மகாராஷ்டிரா) மட்டும் தற்போது இந்திய அணியில் விளையாடி வருகிறார்.