• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /15 நாட்கள் மகப்பேறு விடுப்பு.. ஆண் பணியாளர்களுக்கு குட் நியூஸ்.. முதல்வர் விஜய் அறிவிப்பு

15 நாட்கள் மகப்பேறு விடுப்பு.. ஆண் பணியாளர்களுக்கு குட் நியூஸ்.. முதல்வர் விஜய் அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Nov 26, 2026, 14:54 IST|Updated: Nov 26, 2026, 15:03 IST
joinshare
TN Govt Paternity Leave: தமிழகத்தில் முதன்முறையாக ஆண் பணியாளர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு அளித்து முதல்வர் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆண் அரசு பணியாளர்களுக்கு 15 நாட்கள் மகப்பேறு கால விடுப்பு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

TN Govt Paternity Leave: குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள்ளாகவோ விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

TN Govt Paternity Leave1/5

ஆண் அரசுப் பணியாளர்களுக்கு மகப்பேறு விடப்பு

தமிழகத்தில் பெண் அரசுப் பணியாளர்களுக்கு மட்டும் 365 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் மகப்பேறு கால விடுப்பு அளித்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். ஆண் அரசு பணியாளர்களுக்கு 15 நாட்கள் மகப்பேறு கால விடுப்பு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
TN Govt Paternity Leave2/5

தமிழக அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டுவரும் நிலையில், அரசு ஆண் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கப் பரிசீலிக்க வேண்டுமென்ற கோரிக்கை அரசுப் பணியாளர்களிடமிருந்து அரசுக்கு வரப்பெற்றுள்ளது.
TN Govt Paternity Leave3/5

ஆண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஏன் முக்கியம்?

குழந்தை பிறக்கும் காலகட்டம் என்பது தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் இக்காலகட்டத்தில் உடல் முக்கியமானதாகும். தாய்க்கு மற்றும் மனரீதியான ஆதரவு வழங்குவதுடன், குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமாகிறது. பெண் அரசுப் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது தாய்மை மற்றும் குழந்தை நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
TN Govt Paternity Leave4/5

15 நாட்கள் ஆண் பணியாளர்கள் மகப்பேறு கால விடுப்பு

அதேபோன்று, ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கப்படுவது குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் உதவும். எனவே, தமிழ்நாடு அரசு இக்கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, திருமணமான ஆண் அரசுப் பணியாளர்களுக்கு, அவர்தம் மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க ஏதுவாக 15 நாட்கள் "தந்தையர் மகப்பேறுகால விடுப்பு" (Paternity Leave) வழங்கியும், அவ்விடுப்பினைக் குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ துய்த்துக் கொள்ளவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
TN Govt Paternity Leave5/5

தமிழக அரசின் முக்கிய உத்தரவு

எனவே, ஆண் அரசுப் பணியாளர்கள் இனி வரும் நாட்களில் மகப்பேறு விடுப்பை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதனால், ஆண் அரசுப் பணியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே, தமிகத்தில் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் ஆண் ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
TAGS:
Vijay Thalapathy

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

2

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

3

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

4

பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

5

வாவ் என்ன ஒரு கம்பேக்! 3 தோல்விகளுக்குப் பிறகு சம்பவம் செய்த புதுச்சேரி!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.