Cinema News Tamil : 18 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.1000 கோடி வசூல் வேட்டை நடத்தி உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த ஹாலிவுட் மாஸ்டர்பீஸ் திரைப்படம் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Cinema News Tamil : இப்போது ஒரு படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலிப்பதை சாதனையாக கருதும் சூழலில், 18 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.1000 கோடி வசூல் வேட்டை நடத்திய திரில்லர் படம் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
1/7
உலகளாவிய திரைப்படம்
சமீப காலமாகத் திரைப்படங்கள் உலகம் முழுவதும் பல நூறு கோடிகளையும், ஆயிரம் கோடிகளையும் வசூலிப்பது வழக்கமான விஷயமாகிவிட்டது. பிரம்மாண்ட முதலீட்டில் உருவாகும் பான்-இந்தியா மற்றும் உலகளாவிய திரைப்படங்கள் முதலீட்டை விடப் பல மடங்கு லாபத்தை ஈட்டி வருகின்றன.
2/7
அபோகாலிப்டோ (Apocalypto)
ஆனால், சமூக ஊடகங்களோ அல்லது சர்வதேச சந்தை வசதிகளோ பெரிதாக இல்லாத 18 ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு திரைப்படம் உலகளவில் ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூலித்து வரலாறு படைத்தது என்றால் நம்ப முடிகிறதா? அந்தப் பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்திய படம் தான் 2006 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான அபோகாலிப்டோ (Apocalypto).
3/7
மாயன் நாகரிகத்தின் வீழ்ச்சி
பழங்கால மாயன் நாகரிகத்தின் வீழ்ச்சி காலத்தைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், அதிகார வர்க்கத்தின் கொடுங்கோல் ஆட்சியை மிகத் துல்லியமாகவும் விறுவிறுப்பாகவும் கண்முன் நிறுத்தியது. அடர்ந்த காட்டுக்குள் வாழும் பழங்குடி மக்கள் மீது படையெடுக்கும் ஆளும் வர்க்கத்தினர், அவர்களை நரபலி கொடுப்பதற்காகக் கோட்டைக்கு இழுத்துச் செல்கின்றனர்.
4/7
1995ல் வெளியான சிறந்த படம்
அங்கிருந்து தப்பிக்கும் ஒரு வேட்டைக்கார வீரன், எதிரிகளின் கடுமையான துரத்தல்களிலிருந்தும், பாய்ந்து வரும் விஷ அம்புகளிலிருந்தும் தன் அறிவாலும் தைரியத்தாலும் எப்படித் தப்பிக்கிறான். இறுதியில் எதிரிகளை வீழ்த்தித் தன் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுகிறான் என்பதே இப்படத்தின் பரபரப்பான திரைக்கதை. 1995ல் வெளியாகி சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதுகளை வென்ற பிரேவ்ஹார்ட் திரைப்படத்தை இயக்கிய புகழ்பெற்ற மெல் கிப்சன் இப்படத்தை இயக்கினார்.
5/7
ஆஸ்கர் விருது
அடர்ந்த காடுகளுக்குள்ளேயே தத்ரூபமாகப் படமாக்கப்பட்ட இப்படம், தொழில்நுட்ப ரீதியாகவும் ஒலி அமைப்பிலும் பிரம்மிக்க வைத்து, 3 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. திரைப்பட ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி, உலக வரலாற்று ஆய்வாளர்களுக்கும் ஒரு முக்கியமான குறிப்பேடாக இப்படம் பார்க்கப்படுகிறது.
6/7
40 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்த ரூடி யங் பிளட், தனது அபாரமான உடல்மொழி மற்றும் நடிப்பால் உலக கவனத்தை ஈர்த்தார். இது அவருக்கு இரண்டாவது படம் மட்டுமே என்றாலும், இப்படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான 'முதல் அமெரிக்க கலை விருதை' வென்றார். இந்தப் படத்தின் பட்ஜெட் 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இன்றைய இந்திய மதிப்பில் சுமார் ரூ.334 கோடி.
7/7
ரூ.1,000 கோடி வசூல்
இந்தப் படம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் 120.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. அதாவது, இந்திய ரூபாயில் ரூ.1,000 கோடிக்கும் அதிகம் ஆகும். அன்றைய காலகட்டத்திலேயே மொழிகளைக் கடந்து உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்திய இந்த மாஸ்டர்பீஸ் திரைப்படம், தற்போது அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.