நடிகரும் ரேசருமான அஜித், தற்போது தன்னுடைய 64வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்க இருக்கிறது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக இருப்பவர், அஜித்குமார். இவர் தற்போது கார் ரேஸிங் போட்டியில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து, அவரது அடுத்த படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
Racer Ajithkumar
தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராக இருப்பவர் அஜித்குமார். இப்போது இவர் நடிகர் மட்டும் கிடையாது, கார் ரேஸரும் கூட. தற்போது லண்டன் சில்வர்ஸ்டோனில் நடக்கும் கார் ரேஸில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் இவருடைய அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
2/5
Ajithkumar 64th Film
அஜித்தின் 64வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். ஏற்கனவே அஜித்தை வைத்து குட் பேட் அக்லி எனும் படத்தை இயக்கிய அவர், அடுத்ததாக இந்த படத்திலும் அவருடன் இணைந்துள்ளார். இதற்கான தயாரிப்பாளர் கிடைக்காமல் படத்தின் பணிகள் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. தற்போது இறுதியில், அஜித்தின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினியே இந்த படத்தை இயக்குகிறார்.
3/5
Ajith Vijay Meet Up
சமீபத்தில், அஜித்குமாரை அவரது ரேசிங் நடக்கும் இடத்தில் தமிழக முதல்வர் விஜய் சந்தித்தார். இவர்களின் இந்த நட்பு குறித்து இணையமே கொஞ்ச நாளாக பேசிக்கொண்டிருக்கிறது.
4/5
Ajith Kumar 64th Film Dare Devil
அஜித்தின் 64வது படத்திற்கு ‘டேர் டெவில்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் எனும் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 2ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று, ஆதிக் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
5/5
Fan anticipate AK 64 Movie to watch in big screens
அஜித்தின் படம் திரையரங்கில் வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அவரது அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.