Ajith Kumar : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகரான அஜித் குமார், பைக் பந்தையத்தில் கலந்து கொண்ட போது விபத்தில் சிக்கி இருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Ajith Kumar : தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராக இருக்கும் அஜித் குமார் நடிப்பதை தாண்டி தனக்கு பிடித்த பல்வேறு விஷயங்களையும் செய்து வருகிறார். அதில் ஒன்று, ரேஸிங். அப்படி ஒரு கார் ரேஸிங் போட்டியில் அவர் கலந்து கொண்ட போதுதான் அவருக்கு விபத்து நேர்ந்தது.
1/5
அஜித் ரேசிங்
நடிகர் அஜித்குமார், சமீப நாட்களாக சினிமாவை விட அதிகமாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி சமீப காலமாக அவர் கார் ரேசிங்கில் ஈடுபட்டு வருகிறார். சொந்தமாக, “அஜித் குமார் ரேசிங்” எனும் அணியையும் உருவாக்கி, சர்வதேச பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.
2/5
ஐரோப்பிய ரேஸ்
அஜித், தற்போது ஐரோப்பாவில் நடைப்பெற்று வரும் ‘ஆசிய லெமான்ஸ் தொடர்’ மற்றும் ‘மிச்செலின் லெமான்ஸ் கோப்பை’ போன்ற சாம்பியன்ஷிப் பந்தயங்களில் தன்னுடைய அணியுடன் பங்கேற்று வருகிறார்.
3/5
கார் பந்தயம்
கார் பந்தயம் நடைபெற்ற போது, அவர் கடுமையான போட்டிக்கு இடையே அஜித்தின் கார் எதிர்பாராத விதமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மற்றொரு காரின் மீது மோதி, காரில் தொழில்நுட்ப கோளாறுகளும் ஏற்பட்டது.
4/5
விபத்து
அஜித்தின் கார் விபத்தில் சிக்கியதை அடுத்து, அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், அஜித்தின் காரில் நவீன பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் அஜித்தின் அனுபவங்கள் காரணமாக அவர் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார்.
5/5
டேர் டெவில்
அஜித்குமாரின் விபத்து குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். அதே சமயத்தில் அவரது அடுத்த படமான ‘டேர் டெவில்’ படத்தின் வேலைகளும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.