நடிகர் அஜித், சமீபத்தில் தமிழ்நாட்டு முதல்வரான விஜய்க்கு சென்னையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள ரியாக்ஷன் என்ன தெரியுமா? இதோ அது குறித்த முழு விவரம்..
நடிகர் அஜித்குமார், தற்போது ரேசிங் உள்ளிட்ட பிற விஷயங்களில் பிசியாக இருக்கிறார். இந்த பிசியான சமயத்தில் அவர் தன்னுடைய நண்பரும் முதல்வருமான விஜய்க்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
விஜய் அஜித்
தமிழ்நாட்டில், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததையடுத்து, நடிகரும் ரேசருமான அஜித் குமார் அதற்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
2/5
ரேசர் அஜித்
சினிமாவில் நடிப்பதோடு, ரேசிங்கிலும் கவனம் செலுத்து வரூம் அஜித் குமார் வெவ்வேறு நாடுகளில் நடக்கும் ரேசிங் போட்டிகளுக்கு சென்று கார் பந்தையத்தில் கலந்து கொண்டு தன் அணியை மென்மேலும் மெருகேற்றி வருகிறார். சமீபத்தில், இத்தாலியின் வெனிஸ் நகரத்தில், பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில், அஜித்திற்கு ஜெண்டில்மேன் ஓட்டுநர் விருது வழங்கப்பட்டது.
3/5
முதல்வர் விஜய் அறிவிப்பு
சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் விஜய் சென்னையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து, அஜித் குமார் ”தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டு துறையின்பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமகளை கண்டறிந்து அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை என கூறியிருக்கிறார்.
4/5
ரசிகர்கள் ரியாக்ஷன்
இதற்கு அஜித் ரசிகர்களின் ரியாக்ஷன் கலவையானதாக இருக்கிறது. ஒரு சிலர், “உங்களுக்கு சினிமா உலகில் பிரச்சனைகள் வந்த போது உங்களுடனிருந்த ரசிகர்களை மதிக்காமல், இப்போது இப்படியொரு காரியத்தை செய்வீர்கள் என எதிர்ப்பார்க்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.
5/5
கலவையான கருத்து
ஒரு சில ரசிகர்கள், அஜித்-விஜய் இவ்வளவு மதிப்புணர்வு மற்றும் நட்புறவோடு இருப்பது பார்க்க நன்றாக இருப்பதாக கூறி வருகின்றனர். ரசிகர்கள், இதற்கு எதிர்ப்பை விட ஆதரவை அதிகமாக அளித்திருப்பது யாரும் எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது.