பாலிவுட்டின் பிரபல நடிகர் அர்ஜுன் ராம்பால், தன்னுடைய 8 வருட காதலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த முழு தகவல் என என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
சமீபத்தில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் அர்ஜுன் ராம்பால். இவர் அந்த படத்தில் மேஜர் இக்பால் எனும் கேரக்டரில் நடித்திருப்பார். இவர் தற்போது தன்னுடைய காதலியை கரம்பிடித்திருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
அர்ஜுன் ராம்பால்
துரந்தர் திரைப்படத்தில், ‘மேஜர் இக்பால்’ என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் அர்ஜுன் ராம்பால். இவருக்கு 53 வயது ஆகிறது. பாலிவுட்டில் மட்டுமன்றி தெலுங்கிலும் பகவந்த் கேசரி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
2/5
பாலிவுட் நடிகர்
அர்ஜுன் ராம்பால், கடந்த 8 ஆண்டுகளாக மாடல் அழகியான கேப்ரியெல்லா என்பவரை கதலித்து வந்தார். அர்ஜுன் ராம்பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கின்றனர். 2018ல் பொதுவான நண்பர் மூலம் கேப்ரியல்லாவை இவர் சந்தித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு, 2019ஆம் ஆண்டு இவருக்கு விவாகரத்து கிடைத்துள்ளது.
3/5
கேப்ரியல்லா
அர்ஜுன் ராம்பால், 8 வருடமாக தான் காதலித்த கேப்ரியல்லாவை திருமணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் கோவாவில் உள்ள நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
4/5
லிவ் இன்
இவர்கள் இருவரும் சில வருடங்களாக லிவ்-இன் உறவில் இருந்து வருகின்றனர். அவ்வப்போது வெளிநாடுகளுக்கு ட்ரிப் சென்று அது குறித்த புகைப்படங்கள் மற்றும் போட்டோக்களை பதிவிடுவர்.
5/5
வாழ்த்துகள்
அர்ஜுன் ராம்பால் மற்றும் கேப்ரியல்லாவிற்கு அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.