நடிகர் சிவாஜி கணேசனின் மகள் காலமானார்; திரையுலகினர் இவருடைய மகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி மறைந்தார்; இவர் குறித்த முழு விவரத்தையும், இவருடைய இறப்பிற்கான காரணம் குறித்தும் இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
Actor Sivaji Ganesan Children
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேஷனுக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளனர். அதில், சாந்தி என்கிற மகளும் ஒருவர். இவர், சிவாஜியின் செல்லப்பிள்ளையாகவும் இருந்தார்.
2/5
Shanti Daughter
சிவாஜி கணேசன் - கமலா தம்பதிக்கு, ராம்குமார், பிரபு, சாந்தி, ராஜ்வி என நான்கு பிள்ளைகள் உள்ளனர். சாந்திக்கு நாராயணசாமி என்பவரை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு சத்தியலட்சுமி எனும் மகள் இருக்கிறார்.
3/5
Shanthi Theatre is one of the landmarks of Chennai.
இவர் பெயரில், மவுண்ட் ரோடில் கூட ‘சாந்தி தியேட்டர்’ எனும் தியேட்டர் கட்டப்பட்டது. இதனை அன்றைய முதல்வர் காமராஜர் திறந்து வைத்தார். சென்னையில், குளிர்சாதன வசதியுடன் தொடங்கப்பட்ட முதல் திரையரங்கம் இதுதான். இது, சென்னையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக இருக்கிறது.
4/5
Sivaji Ganesan family property dispute
சாந்தி, திரைப்பட தயாரிப்பிலும் இருந்தவர். 2001ல் சிவாஜி மறைந்த பிறகும், 2007ல் அவருடைய மனைவி கமலா மறைந்த பிறகும் குடும்பத்தினருக்கு இடையே சொத்து பங்கீட்டில் பிரச்சனை வந்தது. இந்த பிரச்சனை கோர்ட் வரை சென்றது.
5/5
Shanti Passes Away
சாந்தி, இன்று காலை காலமாகி விட்டார் என்கிற செய்தி வெளிவந்துள்ளது. அவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இவருடைய மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.