• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /திருமணத்திற்காக கெஞ்சிய ராஷ்மிகா? விஜய் தேவரகொண்டாவை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்..

திருமணத்திற்காக கெஞ்சிய ராஷ்மிகா? விஜய் தேவரகொண்டாவை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்..

Written ByYuvashree M
Published: Oct 24, 2026, 11:52 AM IST|Updated: Oct 24, 2026, 12:21 PM IST
joinshare
ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டவும் சமீபத்தில் கரண் ஜோஹரன் நேர்காணலில் கலந்து கொண்டனர். அப்போது, விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவை பற்றி பேசிய சில விஷயங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

பல ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகர்கள் ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் சமீபத்தில் ரணபலி எனும் படத்திலும் நடித்திருந்தனர். இந்த படத்தின் ப்ரமொஷனுக்காக ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட போது அவர்கள் தங்கள் காதல் குறித்து பேசினர். அப்போது ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவிடம் பல முறை தான் திருமணம் செய்து கொள்ள சொல்லி கெஞ்சியதாக கூறியது இணையத்தில் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Vijay Devarakonda Rashmika Mandanna1/5

விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா

தென்னிந்திய திரையுலகில், முக்கிய நடிகர்களாக இருப்பவர்கள்தான் ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவராகொண்டாவும். இவர்கள் இருவரும், பல வருடங்கள் காதலித்து, கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் திருமணம் செய்து கொண்டனர். இந்த புதுமண தம்பதிகளின் ‘ரணபலி’ எனும் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் குறித்த நேர்காணலில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இவர்கள் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Koffee With Karan2/5

காஃபி வித் கரண்

காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் நேர்காணலில் கலந்து கொண்டனர். அப்போது, திருமணம் செய்து கொள்ளலாம் என்று ராஷ்மிகா தன்னிடம் கேட்டதாகவும், “100 முறை கேள், பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம்” என தான் சொன்னதாகவும் விஜய் தேவரகொண்டா தெரிவித்திருந்தார்.
Rashmika Vijay Devarakonda Love3/5

ராஷ்மிகா விஜய் காதல்

ராஷ்மிகா, தான் விஜய் தேவரகொண்டாவிடம் அவரிடம் ஒரு வருடமாக கேட்டதாகவும் அதன் பிறகு விஜய் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதுதான் நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Vijay Devarakonda On Love And Wedding4/5

காதல்-திருமணம் விஜய் தேவரகொண்டாவின் நிலைபாடு

காஃபி வித் கரண் நிகழ்ச்சியில், இதற்கு தனக்கு வெளியில் பயங்கரமாக திட்டு விழும் என்று கூறிய விஜய் தேவரகொண்டா, தன்னை பொருத்தவரை திருமணம் என்றால் பெரிய கமிட்மெண்ட் என்றும், ஒரு உறவு இருக்கும் போது அதில் தான் அனைத்து சவால்களையும் கடந்து விட்டுதான் திருமணம் எனும் ஒரு உறவுக்குள் போக வேண்டும் என்று விரும்புவேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.
Netizens Showing Hatred5/5

வன்மத்தை கொட்டு நெட்டிசன்கள்

விஜய் தேவரகொண்டா இப்படி பேசியது, இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. காரணம், அவர் தன்னுடைய மனைவியின் காதலை மதிப்பதை விட்டுவிட்டு, எப்படி அதை பெருமையாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகிறார் என்று பலரும் கேட்டு வருகின்றனர். மேலும், ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா மீது பயங்கர காதலுடன் இருப்பதாகவும் விஜய் தேவரகொண்டா அவரை பெரிதாக மதிப்பது போல் தெரியவில்லை என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
மண் சரிவில் சிக்கிய அரசு பஸ்... ஓட்டுநர் பலி - ஊட்டிக்கு செல்ல தடை

மண் சரிவில் சிக்கிய அரசு பஸ்... ஓட்டுநர் பலி - ஊட்டிக்கு செல்ல தடை

2

பிக்பாஸ் 10 : ஜேசனுடன் நெருக்கம்..என்னை குறை சொல்ல நீங்கள் யார்? சாந்தினி அதிரடி!

3

Explained : Shamando வைரஸ் என்றால் என்ன? முதன் முதலாக மனிதருக்கு தொற்று பரவியது எப்படி?

4

ஆஸ்திரேலியாவுக்கு அடி... இந்தியாவுக்கு ஜாக்பாட்! WTC இறுதிப்போட்டி வாய்ப்பு யாருக்கு? Explainer

5

அக்., 31 குரு நட்சத்திரப் பெயர்ச்சி: மகம் நட்சத்திரத்தில் குரு பிரவேசம்.. அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.