• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /வெள்ளையாக இருந்தால்தான் வாய்ப்பு..தென்னிந்திய திரையுலகை விமர்சித்த ராதிகா!

வெள்ளையாக இருந்தால்தான் வாய்ப்பு..தென்னிந்திய திரையுலகை விமர்சித்த ராதிகா!

Written ByYuvashree M
Published: Oct 29, 2026, 10:13 AM IST|Updated: Oct 29, 2026, 10:32 AM IST
joinshare
பிரபல நடிகை ராதிகா ஆப்தே, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவர் தென்னிந்திய திரையுலகில் வெள்ளையாக இருந்தால்தான் வாய்ப்பு என கடுமையாக சாடிய விவகாரம் வைரலாகி வருகிறது.

இந்திய அளவில் பெரிய நடிகையாக இருப்பவர், ராதிகா ஆப்தே. இவர், சமீபத்தில் ‘அக்கா’ எனும் வெப் தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடர் குறித்த நேர்காணலில் அவர் பேசியிருக்கும் சில விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Radhika Apte1/5

ராதிகா ஆப்தே

தமிழ் திரையுலகில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மக்கள் மனங்களில் நன்று பதிந்தவராக இருக்கிறார் ராதிகா ஆப்தே. இவர், தற்போது தென்னிந்திய திரையுலகம் பற்றி பேசியிருப்பது வைரலாகி வருகிறது. இது குறித்துதான் இணையத்தில் பலரும் பேசி வருகின்றனர்.
Radhika Apte Films2/5

ராதிகா ஆப்தேவின் படங்கள்

ராதிகா ஆப்தே, முன்னர் ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்ததோடு சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், அதன் பிறகு வட இந்திய மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர் பின்னர் தென்னிந்திய படங்களில் நடிப்பதையே நிறுத்தி விட்டார்.
Radhika Apte Akka Web series3/5

ராதிகா ஆப்தே அக்கா வெப் தொடர்

ராதிகா ஆப்தே, தற்போது கீர்த்தி சுரேஷுடன் சேர்ந்து ‘அக்கா’ எனும் வெப் தொடரில் நடித்திருக்கிறார். இது குறித்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த அவரிடம் ஏன் 2019க்கு பிறகு தமிழ் திரையுலகில் நடிப்பதே இல்லை? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் கொடுத்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Radika Apte about north indian actress4/5

ராதிகா ஆப்தே வடநாட்டு நடிகைகள் குறித்து பேச்சு

ராதிகா ஆப்தே, வடநாட்டு நடிகைகள் வெள்ளையாக இருப்பதால்தான் தென்னிந்திய சினிமாவில் நடிக்க வைப்பதாகவும், தான் அதிகம் வெள்ளை இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், தென்னிந்திய நடிகைகளையே நடிக்க வைக்கலாமே, எதற்காக வட இந்திய நடிகைக்ளை தேடுகிறார்கள்? அதை நான் ஊக்குவிக்க விரும்பவில்லை என கூறினார்.
Radhika Apte Accusation5/5

ராதிகா ஆப்தே குற்றச்சாட்டு

தென்னிந்திய பெண்களிலேயே அழகானவர்களும் திறமையானவர்களும் நன்றாக நடிப்பவர்களும் இருப்பதாகவும், அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றும் கூறிய ராதிகா ஆப்தே, எதற்காக பாம்பே வரை வேறு ஒரு நடிகையை தேடி வந்து நடிக்க வைத்து, அவருக்கு வேறு ஒருவரை டப்பிங் வேறு பேச வைக்கின்றனர் என்றும் கேட்டிருக்கிறார்.
TAGS:
Indian Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
Explained : பேராசிரியர் கலையரசன் கைது செய்யப்பட்டாரா? போலீஸார் துன்புறுத்தியதாக புகார்..என்ன நடந்தது?

Explained : பேராசிரியர் கலையரசன் கைது செய்யப்பட்டாரா? போலீஸார் துன்புறுத்தியதாக புகார்..என்ன நடந்தது?

2

3% டிஏ உயர்வு வந்தாச்சு: லெவல் 1-18 மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ அரியர் தொகை எவ்வளவு கிடைக்கும்?

3

நெதன்யாகு vs ஐசென்கோட்: இஸ்ரேல் தேர்தல் யாருக்கும் பெரும்பான்மை இல்லை! செக் வைக்கும் அரபு கட்சிகள் -Explained

4

TNPSC Job : தமிழக இளைஞர்களுக்கு மெகா தீபாவளி பரிசு! விரைவில் மின்வாரியத்தில் 8,000 வேலைவாய்ப்பு

5

தமிழகத்தில் நீதிபதிகள் தேர்வில் அதிரடி மாற்றம்: தேர்ச்சி மதிப்பெண்கள் குறைப்பு – முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.