Vijayakanth : நடிகர் விஜயகாந்துடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகைகளின் பட்டியலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Vijayakanth : தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்துடன் ஆரம்ப காலத்தில் நடிக்க மறுத்த நடிகைகளின் பட்டியலை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
1/6
கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த் தனது திரையுலக ஆரம்பக் காலத்தில் பல சவால்களையும் புறக்கணிப்புகளையும் எதிர்கொண்டார். அவர் கருப்பாக இருக்கிறார் என்ற காரணத்தைக் காட்டியும், அப்போது முன்னணி நட்சத்திரமாக இல்லாத சூழலிலும் சில நடிகைகள் அவருடன் நடிக்கத் தயங்கியதும் மறுத்ததும் திரையுலகில் பரவலாகப் பேசப்பட்டவற்றை இங்கே பார்க்கலாம்.
2/6
ராதிகா
ராதிகா (ஆரம்பக் காலத்தில்): 1980-களின் தொடக்கத்தில் வடிவுக்கரசி தயாரித்த அன்னை என் தெய்வம் படத்திற்காக விஜயகாந்துடன் நடிக்க ராதிகாவிடம் கேட்கப்பட்டபோது, அவர் நிறத்தைக் காரணம் காட்டி நடிக்க மறுத்ததாகப் பேட்டிகளில் கூறப்பட்டது. எனினும், விஜயகாந்த் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்த பிறகு, இருவரும் இணைந்து நீதியின் மறுபக்கம், பூந்தோட்ட காவல்காரன், சிறைப்பறவை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தனர்.
3/6
அம்பிகா மற்றும் ராதா:
அம்பிகா மற்றும் ராதா: 80களில் உச்சத்தில் இருந்த இந்த சகோதரிகள் இருவரும் விஜயகாந்தின் ஆரம்பக்காலத் திரைப்படங்களில் அவருடன் நடிக்கத் தயங்கியதாகக் கூறப்பட்டது. பின்னர் விஜயகாந்தின் படங்கள் வணிக ரீதியாகப் பெரிய வெற்றி பெறத் தொடங்கியதும், அவருடன் பல படங்களில் இணைந்து நடித்தனர். தழுவாத கைகள், அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம்.
4/6
நதியா:
நதியா: 80களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நதியா, விஜயகாந்துடன் இணைந்து நடிக்க வந்த வாய்ப்புகளை ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் பூ மழை பொழிந்தது படத்தில் விஜயகாந்துடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தார்.
5/6
ஸ்ரீப்ரியா, சரிதா :
ஸ்ரீப்ரியா, சரிதா : கேப்டன் விஜயகாந்துடன் ஆரம்ப நாட்களில் இவர்களும் சில படங்களில் நடிக்க மறுத்ததாகக் கூறப்பட்டது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கேப்டன் விஜயகாந்தே பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்ப கால கட்டத்தில் முன்னணி நடிகைகள் மறுத்ததாக கூறியுள்ளார். ஆனால், எந்தெந்த நடிகைகள் என்ற பெயரை அவர் வெளிப்படையாக கூறவில்லை.
6/6
ஸ்ரீதேவி:
ஸ்ரீதேவி: தமிழ் மற்றும் இந்தியில் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய ஸ்ரீதேவி, விஜயகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகளைத் தவிர்த்த நடிகைகளில் ஒருவர்.