நடிகர் அஜித் கலந்து கொண்ட பார்சிலோனா கார் ரேஸில், GT3 AM பிரிவில் 2வது இடத்தை பெற்றிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர், தற்போது கார் ரேஸராகவும் இருக்கிறார். இவர், தான் கலந்து கொண்ட பார்சிலோனா கார் ரேஸில் GT3AM பிரிவில் 2வது இடம் பிடித்திருக்கிறார்.
1/5
Ajith's car racing
தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராக இருக்கும் அஜித் தற்போது தனக்கு பிடித்த இன்னொரு விருப்பமான ஹாபியான கார் ரேஸிங்கில் ஈடுபட்டு வருகிறார். இவர், அரசியலுக்கு வருவாறா எனும் எண்ணம் பலருக்கு எழ வைக்கும் வகையில், அவருடைய ரசிகர்களின் செயல் இருக்கிறது.
2/5
Ajith's 'Daredevil' movie
கூடிய விரைவில் அஜித் தன்னுடைய 64வது படமான டேர் டெவில் படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கு முன்னதாக பார்சிலோனா கார் ரேஸில் கலந்து கொண்டிருந்தார். இதில், அவர் ஒரு புதிய மைல்கல்லையும் எட்டியிருக்கிறார்.
3/5
Ajith takes 2nd place in Barcelona car racing
ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற 'சர்க்யூட் டி பார்சிலோனா-காடலுனியா' மைதானத்தில் 24 மணி நேர பார்சிலோனா 2026 இறுதிப் போட்டி நடந்தது. இதில்,GT3 AM பிரிவில் அஜித்குமார் ரேசிங் அணியினர் 2-வது இடத்தை பிடித்துள்ளனர். இது குறித்த வீடியோக்கள் பகிரப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது.
4/5
A political party launched by Ajith's fans
இந்த சமயத்தில், அஜித்தின் ரசிகர்கள் ஒரு அரசியல் கட்சியையும் ஆரம்பித்திருக்கின்றனர். அந்த கட்சிக்கு தமக என பெயரிடப்பட்டிருக்கிறது. ஆனால், அஜித்திற்கு துளியளவும் அரசியலில் ஈடுபட விருப்பமில்லை என்பது உலகறிந்த உண்மை ஆகும்.
5/5
Ajith fans' political party
அஜித்தின் ரசிகர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகே இருக்கும் எலவனாசூர்கோட்டையில், தமிழக மக்கள் கழகம் எனும் கட்சியை தொடங்கி இருக்கின்றனர். அதில், மஞ்சள், வெள்ளை, சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களுடனும், நடுவில் இரண்டு சிறுத்தைகளுடனும் கட்சியின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.