இசையமைப்பாளரான அனிருத், தொழிலதிபர் காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதையடுத்து, இந்த வரவேற்பில் தனுஷ் கலந்து கொள்ளாதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழ் திரையுலகில், முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவருக்கும், காவ்யா மாறனுக்கும் கடந்த 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தையடுத்து, திருமண வரவேற்பு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. இதில் தமிழ் திரையுலகமே கலந்து கொள்ள, குடும்பத்தில் ஒருவராக இருந்த தனுஷ் மட்டும் இதில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
அனிருத் காவ்யா திருமணம் - தனுஷ், SK மிஸ்ஸிங்
தமிழ் திரையுலகில் முக்கியமான இடத்தில் இருப்பவர், அனிருத். இவருக்கும், தொழிலதிபர் காவ்யா மாறனுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களை பற்றி அனைவரும் ஒருபக்கம் பேசிக்கொண்டிருக்க, யாரெல்லாம் கலந்துகொள்ளவில்லை என்றும் ஒரு சிலர் பேசி வருகின்றனர். அப்படி கலந்து கொள்ளாதவர்கள் யார் தெரியுமா? அனிருத்துக்கு மிக நெருக்கமான தனுஷும் சிவகார்த்திகேயனும்தான்.
2/5
தனுஷ் ஏன் அனிருத் திருமணத்திற்கு வரவில்லை
தனுஷ், அனிருத்தின் சகோதரி முறை உறவினரான ஐஸ்வர்யாவின் முன்னாள் கணவர் ஆவார். இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து ஆகி விட்டது. இருப்பினும், இவர்கள் தங்கள் குழந்தைகளை கோ-பேரண்டிங் முறையில் வளர்த்து வருகின்றனர். இதைத்தாண்டி அனிருத்தும் தனுஷும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஆனால், குடும்பத்திற்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை, இவர்களின் நட்பிலும் உறவு முறிந்து விட்டதாக கூறப்படுகிறது.
3/5
அனிருத் தனுஷ் வளர்ச்சி
அனிருத், முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானது 3 படம் மூலமாகத்தான். அப்போதே பெரிய ஆளாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர், இப்போது யாரும் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார். இருப்பினும், இவருடைய திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தனுஷ் வராதது DNA ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
4/5
மிஸ் ஆன அனிருத்துக்கு நெருக்கமானவர்கள்
தனுஷ் போலவே, அனிருத்துக்கும் நெருக்கமான இன்னும் பல பேர் இந்த திருமணத்திற்கு வரவில்லை. சிவகார்த்திகேயன் இப்போதும் அனிருத்துக்கு நண்பராக இருந்தாலும், வேறு ஒரு குடும்ப நிகழ்ச்சியில் பிசியாகி விட்டதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அனிருத்-காவ்யா மாறன் திருமண வரவேற்பில் முதல்வர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இருப்பினும் லோகேஷ் கனகராஜ், நெல்சன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் போன்ற அனிருத்துக்கு நெருக்கமான நபர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
5/5
அனிருத் நண்பர்கள் குழு
ஒரு காலத்தில் அனிருத், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில பேர் ரொம்ப திக் ஃப்ரென்ஸாக இருந்தனர். ஆனால், அந்த குழு இப்போது உடைந்து விட்டது. இவர்கள் ஏன் அனிருத் திருமணத்திற்கு வரவில்லை என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது.