• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் சூப்பர் ஹிட் திரைப்படம்..! எது தெரியுமா..?

ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் சூப்பர் ஹிட் திரைப்படம்..! எது தெரியுமா..?

Written ByYuvashree M
Published: Nov 25, 2026, 10:52 IST|Updated: Nov 25, 2026, 11:16 IST
joinshare
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட் ஆன ஒரு திரைப்படம், தற்போது அவர் பிறந்தநாளையொட்டி ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு முன்பு நடித்த ஒரு திரைப்படம், தற்போது மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது. அது என்ன படம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Rajinikant Birthday1/5

ரஜினிகாந்த் பிறந்தநாள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள், வரும் டிசம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக அவரது பிறந்தநாளில் அவருடைய சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடமும் ஒரு திரைப்படம் வெளியாகிறது.
Rajini Movie Re-Release In December 2/5

டிசம்பரில் ரீ ரிலீஸ் ஆகும் படம்

ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, டிசம்பர் 11 அல்லது 12ஆம் தேதி அண்ணாமலை திரைப்படத்தை வெளியிட, படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Annamalai Movie3/5

அண்ணாமலை திரைப்படம்

1992ஆம் ஆண்டு, அண்ணாமலை திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருப்பார். முக்கிய கதாப்பாத்திரங்களில் சரத்பாபு, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.
Annamalai Story4/5

அண்ணாமலை கதை

அண்ணாமலை திரைப்படம், நட்பு, துரோகம், தொழில்போட்டி உள்ளிட்டவற்றை சுற்றி எழுதப்பட்ட கதையாக இருக்கும். இந்த படம், வெளியான போது பெரும் ஹிட் அடித்த படமாகும். இப்படம், தற்போது ரீ-ரிலீஸ் ஆவதை அடுத்து, இதனை 4கே தரத்தில் காட்சிகள் மேம்படுத்தப்பட்டு டால்பி அட்மாஸ் ஒலித்தொழில்நுட்பத்துடன் இப்படம் மீண்டும் வெளியாக இருக்கிறது.
Annamalai Re-Release5/5

எந்த தேதியில் அண்ணாமலை ரீ-ரிலீஸ்

அண்ணாமலை திரைப்படம், டிசம்பர் 11 அல்லது 12ஆம் தேதி, என எந்த தேதியில் இப்படம் ரிலீஸ் ஆகிறது என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
புதுச்சேரி டெட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் அதிரடி குறைப்பு: புதிய அரசாணை வெளியீடு

புதுச்சேரி டெட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் அதிரடி குறைப்பு: புதிய அரசாணை வெளியீடு

2

Explainer: புதிய வசதி!! இனி நிறுவனத்தை சாராமல் உங்கள் PF கணக்கில் நீங்களே பணம் டெபாசிட் செய்யலாம்!!

3

IPL மினி ஏலம்: பதிவு செய்த 1,120 வீரர்கள்... கவனம் ஈர்த்த முக்கிய வீரர்கள் - ஹைலைட்ஸ்

4

திருச்சி மக்களே! உங்களுக்கான பொன்னான வாய்ப்பு - மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

5

திருப்பரங்குன்றம்: தீபத்தூணில் தீபம் ஏற்ற போராடிய 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.