• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /IPL மினி ஏலம்: பதிவு செய்த 1,120 வீரர்கள்... கவனம் ஈர்த்த முக்கிய வீரர்கள் - ஹைலைட்ஸ்

IPL மினி ஏலம்: பதிவு செய்த 1,120 வீரர்கள்... கவனம் ஈர்த்த முக்கிய வீரர்கள் - ஹைலைட்ஸ்

டிசம்பர் 16ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ள ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு 1,120 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய வீரர்கள் மற்றும் முக்கிய ஹைலைட்ஸ் ஆகியவற்றை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Nov 25, 2026, 11:48 IST|Updated: Nov 25, 2026, 11:57 IST
joinshare
IPL மினி ஏலம்: பதிவு செய்த 1,120 வீரர்கள்... கவனம் ஈர்த்த முக்கிய வீரர்கள் - ஹைலைட்ஸ்
Image Credit: Ben Stokes, David Warner, Aaryavir Sehwag | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
புதுச்சேரி டெட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் அதிரடி குறைப்பு: புதிய அரசாணை வெளியீடு

புதுச்சேரி டெட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் அதிரடி குறைப்பு: புதிய அரசாணை வெளியீடு

2

Explainer: புதிய வசதி!! இனி நிறுவனத்தை சாராமல் உங்கள் PF கணக்கில் நீங்களே பணம் டெபாசிட் செய்யலாம்!!

3

IPL மினி ஏலம்: பதிவு செய்த 1,120 வீரர்கள்... கவனம் ஈர்த்த முக்கிய வீரர்கள் - ஹைலைட்ஸ்

4

திருச்சி மக்களே! உங்களுக்கான பொன்னான வாய்ப்பு - மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

5

திருப்பரங்குன்றம்: தீபத்தூணில் தீபம் ஏற்ற போராடிய 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

IPL 2027 Players Registration Highlights: ஐபிஎல் 2027 தொடர் வரும் மார்ச் - மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. கோவா ஐடிசி கிராண்ட் கோவா சொகுசு ஹோட்டலில் ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

கடந்த நவம்பர் 17ஆம் தேதியோடு ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு வீரர்கள் தக்கவைப்பு நிறைவு செய்தது. இந்நிலையில், கடந்த நவ. 23ஆம் தேதி அன்று ஐபிஎல் மினி ஏலத்திற்கு வீரர்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | ரோகித் சர்மாவுக்கு மாற்றாக 24 வயது வீரர்.. ரூ. 10 கோடிக்கு வாங்க மும்பை திட்டம்!

வீரர்கள் விண்ணப்பம் - ஹைலைட்ஸ்

  • இந்நிலையில், 1120 வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்திற்கு பதிவு செய்துள்ளனர். அதில் 939 இந்திய வீரர்கள் மற்றும் 281 வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
  • வெளிநாட்டு வீரர்களை பொருத்தவரை, 170 Capped சர்வதேச வீரர்கள் ஆவார், 42 வீரர்கள் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
  • மினி ஏலத்திற்கு பதிவு செய்யப்பட்டதில் ஸ்டோக்ஸ் மற்றும் வார்னர் ஆகியோர் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வீரர்களாக பார்க்கப்படுகின்றனர், இவர்கள் ரூ.2 கோடி அடிப்படைத் தொகையாக நிர்ணயித்துள்ளனர்.
  • ஆஸ்திரேலியாவில் ஜேக் பிரேசர்-மெக்கர்க், ஸ்பென்சர் ஜான்சன், ஜை ரிச்சர்ட்சன்; இங்கிலாந்து ஜானி பேர்ஸ்டோவ், சாம் பில்லிங்ஸ், டாம் கர்ரண்; நியூசிலாந்து டேரில் மிட்செல், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டிரன்ட் போல்ட் ஆகிய நட்சத்திர வீரர்களும் புதிதாக பதிவு செய்துள்ளனர்.
  • பசல்ஹக் பரூக்கி, முஜீப் உர் ரஹ்மான், ரஹ்மானுல்லா குர்பாஸ், அன்ரிச் நோர்ஜே, ஜெரால்ட் கோட்ஸி, மதீஷா பதிரானா, வனிந்து ஹசரங்க, ஷாய் ஹோப், ஷிம்ரோன் ஹெட்மயர் உள்ளிட்ட மற்ற வெளிநாட்டு வீரர்களும் அதிகம் கவனிக்கப்படுகிறார்கள்.
  • 11 வங்கதேச வீரர்கள் முதற்கட்டமாக பதிவு செய்துள்ளனர். முஸ்தபிஷுர் ரஹ்மான், நஹித் ராணா, ஷகிப் அல் ஹாசன் ஆகியோர் இதில் பதிவு செய்யவில்லை.

மேலும் படிக்க | CSK Trade: ரூ. 10 கோடிக்கு தரமான ஆல்-ரவுண்டர்.. குஜராத் உடன் ஓகேயான டீல்?

  • முஸ்தபிஷுர் ரஹ்மான் கடந்த முறை ஏலத்தில் ரூ.9.20 கோடிக்கு எடுக்கப்பட்டாலும், வங்கதேசம் சார்ந்து எழுந்த பதற்றத்தை தொடர்ந்து கேகேஆர் அணி பிசிசிஐ வழிகாட்டுதலின்படி அவரை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
  • இந்திய வீரர்கள் பட்டியலில் ஆவேஷ் கான், தீபக் சஹார் ஆகியோர் ரூ.2 கோடியை அடிப்படைத் தொகையாக நிர்ணயித்துள்ளனர்.

கவனம் ஈர்க்கும் 3 U19 வீரர்கள்

19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற ஆர்யவீர் சேவாக்கும் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். இவர் மீதும் அதிகம் வெளிச்சம் இருக்கிறது.

அதேபோல், U19 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் கடைசி வரை நின்று ஆட்டத்தை வென்று கொடுத்த மோகித் உல்வாவும் ஏலத்திற்கு பதிவு செய்துள்ளார். அதே அணியில் இடம்பெற்ற காவ்யன் படேல் என்பவரும் பதிவு செய்துள்ளார். இவர்கள் அனைவரும் தலா ரூ.30 லட்சம் அடிப்படை தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 3இல் இறுதிப்பட்டியல்?

முதற்கட்டமாக பதிவு செய்த பட்டியல் அனைவரும் இந்த இறுதி ஏலத்திற்கு வருவார்கள் ன்பது கிடையாது. இந்த பட்டியலில் இருந்து வெகு சிலரை மட்டும் 10 அணிகளும் தேர்வு செய்யும். டிசம்பர் 1ஆம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் தங்களுக்கு விரும்பும் வீரர்களின் பட்டியலை சமர்பிக்க வேண்டும். எனவே, டிசம்பர் 3ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.

மேலும் படிக்க | "இதெல்லாம் அரசியல்.." ஓய்வறை சர்ச்சை சர்பராஸ் கான்! கம்பீர் சொன்ன வார்த்தை!

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL