• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /புதுச்சேரி
  • /புதுச்சேரி டெட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் அதிரடி குறைப்பு: புதிய அரசாணை வெளியீடு

புதுச்சேரி டெட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் அதிரடி குறைப்பு: புதிய அரசாணை வெளியீடு

Puducherry TET Pass Marks News: புதுச்சேரி மாநிலத்தில் ஆசிரியர் பணிநியமனம் மற்றும் பதவி உயர்வுக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் (TET) தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இது தேர்வர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Written ByShiva Murugesan
Published: Nov 25, 2026, 12:01 IST|Updated: Nov 25, 2026, 12:08 IST
joinshare
புதுச்சேரி டெட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் அதிரடி குறைப்பு: புதிய அரசாணை வெளியீடு
Image Credit: File | Puducherry TET Pass Marks Reduced: New GO Issued for OBC, SC/ST Candidates

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
புதுச்சேரி டெட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் அதிரடி குறைப்பு: புதிய அரசாணை வெளியீடு

புதுச்சேரி டெட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் அதிரடி குறைப்பு: புதிய அரசாணை வெளியீடு

2

Explainer: புதிய வசதி!! இனி நிறுவனத்தை சாராமல் உங்கள் PF கணக்கில் நீங்களே பணம் டெபாசிட் செய்யலாம்!!

3

IPL மினி ஏலம்: பதிவு செய்த 1,120 வீரர்கள்... கவனம் ஈர்த்த முக்கிய வீரர்கள் - ஹைலைட்ஸ்

4

திருச்சி மக்களே! உங்களுக்கான பொன்னான வாய்ப்பு - மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

5

திருப்பரங்குன்றம்: தீபத்தூணில் தீபம் ஏற்ற போராடிய 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Puducherry TET Pass Marks News: ஆசிரியர் நலச் சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் டெட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பொதுப் பிரிவினருக்கு 60% மதிப்பெண்ணும், பிசி, எம்பிசி, ஓபிசி பிரிவினருக்கு 50% (75 மதிப்பெண்கள்) மற்றும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு 40% மதிப்பெண்ணும் தேர்ச்சி வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்டை மாநில டெட் தேர்வுகளுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆசிரியர் பணிக்கு பிற மாநிலத் தேர்வுகளுக்கும் அங்கீகாரம்

பள்ளிக் கல்வித்துறையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களைப் பணியமர்த்துவதற்கு, சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) மட்டுமே முன்பு பிரதானமாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது, அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுகள் நடத்தும் டெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களும் புதுச்சேரியில் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க -  புதுச்சேரியில் அச்சுறுத்தும் டெங்கு: சிறப்பு வாா்டு அமைக்கப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

ஆசிரியர் சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கை

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் பணியில் சேருவதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்ச்சி மதிப்பெண்களில் தளர்வு அளிக்க வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர் நலச் சங்கங்களும் தேர்வர்களும் அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த புதுச்சேரி நிர்வாகம், தற்போது மதிப்பெண் குறைப்பு முடிவை எடுத்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை

புதிய அரசாணையின்படி, பொதுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அது 60 சதவீதமாகவே நீடிக்கிறது. அதே சமயம், எம்பிசி, ஓபிசி மற்றும் பிசி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை 82 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்ற நிலை மாறி, இனி 75 மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி பெற முடியும்.

பட்டியலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கூடுதல் தளர்வு

பட்டியலினத்தவர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு இந்த அரசாணை மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இவர்களுக்கான குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண் 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்திற்கான உத்தரவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க -  புதுச்சேரி, காரைக்கால் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! நவம்பர் 27-ல் குறைதீர்வு முகாம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Puducherry