• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /IND vs WI 5th T20: இந்திய அணியில் புவனேஷ்வர் குமார்? முக்கிய வீரர் விலகல்!

IND vs WI 5th T20: இந்திய அணியில் புவனேஷ்வர் குமார்? முக்கிய வீரர் விலகல்!

Written ByR Balaji
Published: Oct 16, 2026, 06:13 PM IST|Updated: Oct 16, 2026, 06:17 PM IST
joinshare

அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக 5வது டி20 போட்டியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக புவனேஷ்வர் குமார் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

Cricket 1/5

அர்ஷ்தீப் சிங் விலகல்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4 வது டி20 போட்டியின்போது அர்ஷ்தீப் சிங்கிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால், தொடரின் கடைசி போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், அவரது உடல்நிலையை பரிசோதித்த பிசிசிஐ மருத்துவக்குழு 5வது டி20 போட்டியில் அவரை விளையாட வைக்க வேண்டாம் என பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தேர்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
Cricket 2/5

புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு?

அர்ஷ்தீப் சிங் கடைசி போட்டியில் விளையாடாத நிலையில், அவருக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்காக தேர்வு செய்யப்பட்டிருந்த அவருக்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படலாம். அப்படி இடம்பெறும் பட்சத்தில் அவர் பிளேயிங் 11ல் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Cricket3/5

புவனேஷ்வர் குமாருக்கு சாதகமான சூழல்

4ஆவது டி20 போட்டியில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அர்ஷ்தீப் விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக முழுநேர வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பேக்கப் வீரர்களில் ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், வைபவ் சூர்யவன்ஷி, குல்தீப் யாதவ் ஆகியோர் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Cricket4/5

தொடரை வெல்லப்போவது யார்?

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றுள்ளது. இதனால் 5வது போட்டி வாழ்வா சாவா போட்டியாக இரு அணிகளுக்கும் மாறி உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும். இதனால், இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
Cricket5/5

சின்னசாமி மைதானத்தில் புவனேஷ்வர் குமாரின் சாதனை

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 5வது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் கடந்த 2026 ஐபிஎல்லில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசினார். 5 போட்டிகளில் 11 விக்கெட்களை வீழ்த்தி அசத்தில் உள்ளார். எகானமி ரேட்டும் 7.80 மட்டுமே வைத்துள்ளார். இதனால் புவனேஷ்வருக்கு இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை கம்பீர் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
TAGS:
Cricket

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

2

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

3

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

4

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

5

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.