• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /"இப்படித்தான் ஆடுவேன் என்பதா?" ரிஷப் பண்ட் மீது ரவிச்சந்திரன் அஸ்வின் கடும் அதிருப்தி!

"இப்படித்தான் ஆடுவேன் என்பதா?" ரிஷப் பண்ட் மீது ரவிச்சந்திரன் அஸ்வின் கடும் அதிருப்தி!

Written ByR Balaji
Published: Aug 28, 2026, 15:41 IST|Updated: Aug 28, 2026, 15:45 IST
joinshare

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. தொடரை முழுவதுமாக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. இத்தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மொத்தம் 168 ரன்கள் எடுத்த அவர், இரண்டு அரைசதங்களையும் பதிவு செய்தார். புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பண்ட்டின் செயல்பாடு ஓரளவு சிறப்பாக இருந்ததாக கூறப்பட்டாலும், முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் ஆஷ்வின் அவரது ஆட்டத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளார். 
 

Cricket1/5

ரிஷப் பண்ட்

தனது யூடியூப் சேனலில் பேசிய ஆஷ்வின், ரிஷப் பண்ட் மீதான தனது எதிர்பார்ப்பு இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். “ரிஷப் பண்ட் மீது எனக்கு இருந்த எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேறவில்லை. ஆட்டம் நம் கையில் இருக்கும்போது அதிக ஆபத்தான ஷாட்களை விளையாடுவது சரியான அணுகுமுறையா என்பதை பார்க்க வேண்டும். ‘ரிஷப் இப்படித்தான் விளையாடுவார்’ என்று கூறுவதை விட, அந்த நேரத்தில் அணிக்கு என்ன தேவை என்பதுதான் முக்கியம்” என ஆஷ்வின் தெரிவித்துள்ளார்.
Cricket2/5

ரிஷப் பண்ட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் பண்ட்டின் முக்கியமான பங்களிப்புகளை ஆஷ்வின் மறுக்கவில்லை. குறிப்பாக 2020-21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சிட்னி மற்றும் பிரிஸ்பேன் டெஸ்ட்களில் பண்ட் விளையாடிய இன்னிங்ஸ்களை அவர் பாராட்டினார். அதே நேரத்தில், அந்த வெற்றிகளில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்கூரின் பங்களிப்புகளும் மிகவும் முக்கியமானவை என்பதை சுட்டிக்காட்டினார்.
Cricket3/5

ரிஷப் பண்ட்

ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வதற்கு 11 வீரர்களின் பங்களிப்பும் தேவைப்படும். ஆனால், போட்டி முக்கியமான கட்டத்தில் இருக்கும்போது ஒரே ஒரு தவறான முடிவு ஆட்டத்தின் முடிவையே மாற்றிவிடும் என்றும் ஆஷ்வின் கூறினார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியின் நிலைமைக்கு ஏற்ப பண்ட் தனது ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். முன்னாள் வீரர்களான வீரேந்திர சேவாக், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரும் அதிரடியாக விளையாடியவர்கள்தான். ஆனால், அணியின் சூழ்நிலைக்கு ஏற்பவும் அவர்கள் விளையாடுவார்கள். அப்போது ஆபத்தான ஷாட்களுக்கு செல்ல மாட்டார் என ஆஷ்வின் குறிப்பிட்டார்.
Cricket4/5

ரிஷப் பண்ட்

அதேபோல், ஒரு சில வீரர்களுக்கு மட்டும் இந்திய அணி நிர்வாகம் சிறப்பு சலுகை அல்லது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதை தான் ஏற்கவில்லை என்றும் ஆஷ்வின் தெரிவித்துள்ளார். ரிஷப் பண்ட்டை மட்டும் ‘ஒரு தலைமுறைக்கு ஒருமுறை வரும் வீரர்’ என்ற வகையில் ஆதரிப்பது சரியல்ல என்றும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களும் அதே அளவிலான ஆதரவுக்கு தகுதியானவர்கள் என்றும் அவர் கூறினார்.
Cricket5/5

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் ஏற்கனவே 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பதால், இனிமேல் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது என்று ஆஷ்வின் தெரிவித்துள்ளார். “ரிஷப் அனுபவம் வாய்ந்த வீரர். 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவிட்டார். எனவே, அவர் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். அவரது முடிவெடுக்கும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டால், இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடும் வீரராக மீண்டும் உருவாக முடியும்” என ஆஷ்வின் தெரிவித்துள்ளார்.
TAGS:
Cricket

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.