பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது. இதையடுத்து, பல சேனல்களில் இருந்து அங்கு ஹோம்ம் டூர் சென்று வருகின்றனர். அவர்கள் தங்கள் வீடியோக்களில் கூறியிருக்கும் விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
பிக்பாஸ் 10 நிகழ்ச்சியை விரைவில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சி வரும் 6ஆம் தேதி தொடங்குவதை அடுத்து, இந்த முறை பிக்பாஸ் வீட்டில் இருக்கும் விஷயம் என்னென்ன என்று இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
பிக்பாஸ்
மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கு வந்ததை அடுத்து, இப்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 10வது சீசன் தமிழில் தொடங்க இருக்கிறது.
2/5
ஹோம் டூர்
பிக்பாஸ் 10 இல்லத்தில் பலர் ஹோம் டூர் செய்திருந்தனர். எப்போதும் போல, இந்த வருடமும் பற்பல புதிய விஷயங்கள் பிக்பாஸில் இடம் பெற்றுள்ளது. வீட்டை சுற்றி கேமராக்கள், புதுவிதமான டைனிங் ஹால், பெட்ரூம் என்று புதுமை புகுத்தப்பட்டுள்ளது.
3/5
பாத்ரூமில் ஸ்பீக்கர்
பிக்பாஸில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பலர் பாத்ரூமுக்குள் சென்று, அங்கு ரகசியம் பேசுவதாக கூறப்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், பாத்ரூமிலும் மைக் வைக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இம்முறை டூர் சென்றவர்கள் பாத்ரூமில் ஸ்பீக்கர் இருப்பதை பார்த்து மைக் என்று நினைத்துக்கொண்டனர். அங்கு மைக் வைக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை நிகழ்ச்சி ஆரம்பித்த பிறகுதான் கண்டுபிடிக்க முடியும்.
4/5
நட்சத்திரங்கள்
பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்களான டாலி, குரேஷி, ஹேமா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல், நாளை தெரிந்து விடும்.
5/5
காமன் மேன்
தமிழ் மக்கள் பலர், பிக்பாஸ் 10 நிகழ்ச்சியை பார்ப்பதற்காக காத்துக்கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் புதிதாக, ‘காமன் மேன்’ நிகழ்ச்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 3 பேரும் அனுப்பப்படுவர்.