இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, சென்னை உலகின் அதிக காற்று மாசடைந்த நகரமாக மாறி இருக்கிறது. இதோ அது குறித்த முழு விவரம்.
தீபாவளி கொண்டாட்டங்கள் நீடித்ததை அடுத்து, சென்னையில் காற்று மாசு அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இது குறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
தீபாவளி கொண்டாட்டங்கள் நீடித்ததை அடுத்து, சென்னையில் காற்று மாசு அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இது குறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
2/5
தீபாவளி பண்டிகை
நவம்பர் 8ஆம் தேதியான நேற்று சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிக்கப்பட்டதால், நகர் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
3/5
மாசடைந்த நகரங்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி, மாசடைந்த நகரங்களின் பட்டியலில் உலகளவில் சென்னை முதலிடத்தை எட்டியிருக்கிறது. சர்வதேச அளவிலான காற்றின் தரக்குறியீட்டு பட்டியலில், 907 புள்ளிகளுடன் மிக மோசமான பிரிவில் சென்னை இடம் பெற்றிருக்கிறது.
4/5
காற்று மாசு அதிகரிப்பு
தீபாவளி கொண்டாட்டங்கள் நீடித்ததை அடுத்து, சென்னையில் நள்ளிரவிலும் காற்று மாசு அதிகமாக பதிவாகி இருக்கிறது. தமிழ்நாட்டின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, (நவம்பர் 9), ராயபுரத்தில் காற்று தரக்குறியீடு 249 ஆகவும், மணலி வில்லேஜ் பகுதியில் 219 ஆகவும் உயர்ந்திருக்கிறது.
5/5
எங்கெல்லாம் அதிகரித்துள்ளது
தொடர்ந்து, மணலியில் 197, அரும்பாக்கத்தில் 195, பெருங்குடியில் 174, கொடுங்கையூரில் 172, வேளச்சேரியில் 113 ஆக காற்று மாசு பதிவாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக மணலி வில்லேஜ் பகுதியில் இரவு 9 மணிக்கு 164 ஆக இருந்த காற்று தரக்குறியீடு நள்ளிரவூ 12 மணிக்கு 219ஆக உயர்ந்துள்ளது. இதிலிருந்து 3 மணி நேரத்தில் 55 புள்ளிகள் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.