திருவனந்தபுரம் டூ சென்னை வரை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து சென்னை வர இருக்கும் தென் மாவட்ட மக்களுக்கு இந்த சிறப்பு ரயில் பயனளிக்கும்.
சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் வடக்கு - தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அட்டவணை, இது நின்று செல்லும் ரயில் நிலையங்கள், மொத்த பெட்டிகள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
1/5
சிறப்பு ரயில் அறிவிப்பு
நவராத்திரி பண்டிகைக்கு வரும் செவ்வாய்கிழமை (அக். 20) வரை விடுமுறையாகும். தொடர் விடுமுறை என்பதால் பல்வேறு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
2/5
திருவனந்தபுரம் வடக்கு - தாம்பரம் எக்ஸ்பிரஸ்
சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 06164)வரும் அக்டோபர் 20ஆம் தேதி (செவ்வாய்) திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் (அக். 21) பகல் 11 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
3/5
தாம்பரம் - திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ்
சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 06163) வரும் அக்டோபர் 21ஆம் தேதி (புதன்) மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் (வியாழன்) அதிகாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திற்கு சென்றடையும்.
4/5
எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும்?
திருவனந்தபுரம் வடக்கு - தாம்பரம் இடையே திருவனந்தபுரம் கிழக்கு, நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
5/5
எத்தனை பெட்டிகள்?
மூன்றாம் அடுக்கு ஏசி பெட்டிகள் - 16, படுக்கை வகுப்பு பெட்டிகள் - 2, மாற்றுத்திறனாளிக்கு ஏற்ற இரண்டாம் வகுப்பு பெட்டிகள் -1, லக்கேஜ் மற்றும் பிரேக் வேன் - 1