• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. அதிரடி அறிவிப்பு! பயணிகளே அலர்ட்

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. அதிரடி அறிவிப்பு! பயணிகளே அலர்ட்

Edited ByUmabarkavi K
Published: Oct 18, 2026, 01:34 PM IST|Updated: Oct 18, 2026, 01:41 PM IST
joinshare
Chennai Metro Rail Latest News: ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 19, 20ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Chennai Metro Rail Latest News: நாளை மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Chennai Metro Rail1/5

சென்னை மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. மெட்ரோவில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். ரயில் பயணிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வப்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் மெட்ரோ சேவையில் சில மாற்றங்களை செய்வது வழக்கம்.
Chennai Metro Rail2/5

மஞ்சள் வழித்தடத்தில் எந்த நேரத்தில் ரயில்கள் இயக்கம்?

மஞ்சள் வழித்தடத்தில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, பயணிகள் இதற்கு ஏற்ப தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Chennai Metro Rail3/5

2 நாட்கள் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கம்

ப்ளூ மற்றும் கிரீன் லைனில் மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கு ஒருமுறையும், இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
Chennai Metro Rail4/5

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

அந்த வகையில், தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறையை அடுத்து, மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விஜயதசமி, ஆயுதபூஜை பண்டிகை விடுமுறையை யொட்டி, அக்டோபர் 19, 20ஆம் தேதிகளில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த இரண்டு நாட்களிலும் மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Metro Rail5/5

அக்டோபர் 21 முதல் வழக்கம்போல் ரயில்கள் இயக்கம்

அக்டோபர் 19,20ஆம் தேதிகளில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அக்டோபர் 21ஆம் தேதி முதல் வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று பயணிகள் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
TAGS:
Chennai

Trending

  • News
  • Photos
  • Videos
அனிருத்-காவ்யா திருமணத்தை அன்றே கணித்த பெண்! வைரலாகும் வீடியோ..

அனிருத்-காவ்யா திருமணத்தை அன்றே கணித்த பெண்! வைரலாகும் வீடியோ..

2

மக்களை சமூக அந்தஸ்தை வைத்து பிரித்து பார்த்த அமைச்சர்..டிடிவி தினகரன் கண்டனம்!

3

Aippasi Matha Rasi Palan 2026: இன்று முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! ஒரு மாதத்திற்கு கவலையே வேண்டாம்

4

‘டோரதி’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

5

டிகிரி படித்தவர்களுக்கு அரசின் சூப்பர் வேலை.. கைநிறைய சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.