Tiruppur Government Job: தமிழக அரசு மாவட்ட வாரியாக பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்க ஆதரவு நபர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அரசாணை (நிலை) எண்.23, மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் நாள் 12.08.2026 -ன்படி, திருப்பூர் மாவட்டத்தில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 (POCSO Act), POCSO Rules, 2020 மற்றும் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அரசாணை (நிலை) எண்.23, நாள் 12.08.2026 ஆகியவற்றின் அடிப்படையில், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தேவையான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக "ஆதரவு நபர்கள் (Support Persons)" தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஆதரவு நபர் குழந்தையின் சிறந்த நலன், பாதுகாப்பு மற்றும் உரிமைகளை கருத்தில் கொண்டு, காவல்துறை, CWC, DCPU, மருத்துவமனை மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட தொடர்புடைய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும், குழந்தைக்கு தேவையான மருத்துவம், உளவியல் ஆதரவு, கல்வி மற்றும் மறுவாழ்வு சேவைகளைப் பெற உதவுவதுடன், வழக்கின் முன்னேற்றம் குறித்து குழந்தை மற்றும் குடும்பத்தினருக்கு தேவையான தகவல்களை வழங்கி, குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
| பதவி | பணியிடங்கள் எண்ணிக்கை | வயது வரம்பு |
| ஆதரவு நபர்கள் (Support Persons) | 20 | குறைந்தபட்பம் வயது 25க்கு மேற்பட்டவர்கள் |
குழந்தைகள் நலன், சுகாதாரம் அல்லது கல்வி தொடர்பான துறைகளில், குறிப்பாக சமூகப்பணி, சமூகவியல், சட்டம், உளவியல், குழந்தை வளர்ச்சி அல்லது குழந்தைகள் நலனுடன் தொடர்புடைய பிற பொருத்தமான துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்ற எந்த ஒரு நபரும் விண்ணப்பிக்கலாம். அல்லது குழந்தைகள் கல்வி, வளர்ச்சி, சுகாதாரம் அல்லது பாதுகாப்பு தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதரவு நபரின் பணிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். தகுதியான ஆதரவு நபர்களுக்கு, அவர்களுக்கு வழக்குகள் ஒதுக்கப்பட்டு, அவ்வழக்குகளில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக மட்டுமே, ஒரு வழக்கிற்கு ரூ.10,000/- வரை மதிப்பூதியம் நான்கு தவனைகளாக ரூ.2500/- வீதம் (பயணச் செலவு உட்பட) வழங்கப்படும். வழக்குகள் ஒதுக்கப்படாத காலத்திற்கு எவ்வித மதிப்பூதியமும் வழங்கப்படாது.
தகுதியும் ஆர்வமும் உள்ள தனிநபர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் ஈடுபடும் தகுதியான அமைப்புகள், ஆதரவு நபர் (Support Person) பணிக்கான விண்ணப்பப் படிவத்தை tiruppur.nic.in-ல் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து 27.10.2026-க்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU), அறை எண். 705, 7 வது தளம், மாவட்ட ஆட்சியரகம், திருப்பூர் 641604 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் போக்சோ வழக்குகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக மொத்தம் 20 ஆதரவு நபர் (Support Persons) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஆதரவு நபர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் உரிய ஆவணங்களையும் 27.10.2026-க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU), அறை எண் 705, 7-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், திருப்பூர் 641604 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.