• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /சென்னை : ரேஷன் கார்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

சென்னை : ரேஷன் கார்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

Written ByKarthikeyan Sekar
Published: Nov 11, 2026, 08:38 PM IST|Updated: Nov 11, 2026, 09:29 PM IST
joinshare
Ration Card Latest News : சென்னையில் ரேஷன் கார்டு குறைத்தீர் முகாம்கள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Ration Card Latest News : சென்னையில் நடைபெறும் ரேஷன் கார்டு குறைத்தீர் முகாம்களில் பொதுமக்கள் தங்களுக்கான குறைகளுக்கு உடனடி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இது குறித்த முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
 

Ration Card Latest News1/5

குறைதீர் முகாம்

1. 19 மண்டலங்களில் குறைதீர் முகாம் - பொது விநியோகத் திட்டத்தின் பலன்களைப் பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில், சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும் நவம்பர் 14, 2026 (சனிக்கிழமை) அன்று மாதாந்திர மக்கள் குறைதீர் முகாம் முற்பகல் 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெற உள்ளது.
Ration Card Latest News2/5

ரேஷன் அட்டை திருத்தப் பணிகள்

2. ரேஷன் அட்டை திருத்தப் பணிகள் - இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் புதிய உறுப்பினர்களின் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் அலைபேசி எண் பதிவு அல்லது மாற்றம் போன்ற பல்வேறு சேவைகள் நேரடியாக மேற்கொள்ளப்படவுள்ளன.
Ration Card Latest News3/5

முதியோருக்கான அங்கீகாரச் சான்று

3. முதியோருக்கான அங்கீகாரச் சான்று - நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று உணவுப் பொருட்களை வாங்க இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பதிலாக வேறொருவர் பொருட்களைப் பெற உதவும் சிறப்பு ‘அங்கீகாரச் சான்று’ (Authorisation Certificate) இம்முகாமில் வழங்கப்படும்.
Ration Card Latest News4/5

புகார்களுக்குத் தீர்வு

4. குறைகள் மற்றும் புகார்களுக்குத் தீர்வு - பொது விநியோக நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் உள்ள குறைபாடுகள் குறித்த புகார்களைத் தெரிவித்து, உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
Ration Card Latest News5/5

பதிவு செய்த தொலைபேசி அவசியம்

5. பதிவு செய்த தொலைபேசி அவசியம் - அனைத்துச் சேவைகளும் குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) மூலமே சரிபார்க்கப்படும் என்பதால், பொதுமக்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசியுடன் நேரில் வந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
TAGS:
Ration Card

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.