• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /நடராஜனை கழட்டிவிடும் டெல்லி கேப்பிடல்ஸ்... கொக்கிப்போட்டு தூக்குமா CSK? - அஸ்வின்

நடராஜனை கழட்டிவிடும் டெல்லி கேப்பிடல்ஸ்... கொக்கிப்போட்டு தூக்குமா CSK? - அஸ்வின்

Written BySudharsan G
Published: Sep 15, 2026, 01:30 IST|Updated: Sep 15, 2026, 01:34 IST
joinshare
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஐபிஎல் 2027 மினி ஏலத்தில் நடராஜனை எடுக்க அதிக வாய்ப்புள்ளது என ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.

நடராஜனை ரூ.10.75 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் எடுத்தது. கடந்த இரண்டு சீசனிலும் அவர் சுமாராகவே விளையாடினார். மிட்செல் ஸ்டார்க் இருப்பதால் டெல்லி அணிக்கு நடராஜனின் தேவையும் குறைவுதான். எனவே அவரை மினி ஏலத்தில் விடுவிக்க டெல்லி விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை அஸ்வினும் உறுதிசெய்யும் வகையில் பேசியிருக்கிறார்.

Chennai Super Kings1/5

சிஎஸ்கேவின் மூன்று ஆண்டுகால போராட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த மூன்று சீசன்களாக கடுமையாக சொதப்பி வந்தது. 2023ஆம் ஆண்டுக்கு பின்னர் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறவே இல்லை.
Chennai Super Kings2/5

ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஸி சொதப்பல்

தோனி கேப்டன்ஸி பொறுப்பில் இருந்து விலகிய பின்னர் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன்ஸி கொடுக்கப்பட்டது. அவரும் இன்னும் முழு வீச்சை வெளிப்படுத்தவில்லை, பேட்டிங்கிலும் சொதப்பி வருகிறார். இவை ஒருபுறம் இருக்க, தலைமை பயிற்சியாளர் பிளமிங்கும் அவரது பொறுப்பில் இருந்து விலகிவிட்டார்.
Chennai Super Kings3/5

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தேடல்

இந்தச் சூழலில், சிஎஸ்கே அணிக்கு பயிற்சியாளர் தேடலும், வீரர்கள் தேடலும் ஒருங்கே இருந்து கொண்டே இருக்கிறது. சிஎஸ்கே அணி ஒரு ஆல்-ரவுண்டர், ஒரு பினிஷரின் தேவை இருக்கிறது. அதைவிட டெத் பௌலிங்கிற்கு வேகப்பந்துவீச்சாளரின் தேவையும் அதிகம் இருக்கிறது. அதுவும் இந்திய பந்துவீச்சாளர்தான் தேவையாகும்.
Delhi Capitals4/5

டெல்லி அணி நடராஜனை விடுவிக்கிறது

அப்படியிருக்க, டெல்லி அணியில் இருந்து டி. நடராஜன் விடுவிக்கப்பட உள்ளதாக ரவிசந்திரன் அஸ்வின் அவரது யூ-ட்யூப் சேனலில் தெரிவித்துள்ளார். விஜய் சங்கர் உடனான கலந்துரையாடலில் அஸ்வின் இத்தகவலை தெரிவித்தார். நடராஜன் ஏலத்திற்கு வரும்பட்சத்தில் சிஎஸ்கே அணி நிச்சயம் அவரை எடுக்க முயற்சிக்கும். அவர் சிஎஸ்கேவுக்கு வரும்பட்சத்தில் டெத் ஓவரில் அன்சுல் கம்போஜ் உடன் சிறப்பாக பந்துவீச வாய்ப்புள்ளது என விஜய் சங்கர் அதில் பேசியிருந்தார்.
Delhi Capitals5/5

மொத்தமாக மாறும் டெல்லி கேப்பிடல்ஸ்

அதேநேரத்தில் டெல்லி அணி நடராஜனை ஏலத்தில் விடுவித்தால், அவரது முந்தைய அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அவரை எடுக்க ஆர்வம் காட்டும் என்றும் அஸ்வின் அதில் குறிப்பிட்டிருந்தார். டெல்லி அணியும் பெரிய மாற்றத்திற்கு உள்ளாகிறது. தலைமை பயிற்சியாளராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்கிறார். பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங், பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீரர் சமிந்தா வாஸ், சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக அமித் மிஸ்ரா பொறுப்பேற்க உள்ளதாக தெரிகிறது.
TAGS:
Chennai Super Kings

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

2

இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ

3

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

4

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

5

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.