• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /பயணிகளுக்கு குட் நியூஸ்! 1,000 புதிய ஏசி பேருந்துகள்.. எங்கு தெரியுமா? CM விஜய் அறிவிப்பு

பயணிகளுக்கு குட் நியூஸ்! 1,000 புதிய ஏசி பேருந்துகள்.. எங்கு தெரியுமா? CM விஜய் அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Nov 09, 2026, 05:38 PM IST|Updated: Nov 09, 2026, 05:44 PM IST
joinshare
Chennai MTC AC Buses: சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், ரூ.17.99 கோடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகளை பொருத்தும் பணிக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

Chennai MTC AC Buses: முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்புகள் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. 
 

Chennai New Ac Buses1/5

1,000 புதிய ஏசி பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவு

சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்திடவும், பேருந்துப் பணிமனைகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
Chennai New Ac Buses2/5

முதல்வர் விஜய் ரூ.500 கோடி ஒதுக்கீடு

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னையில் தற்போது 755 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 355 பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டவையாகும். தமிழ்நாடு மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வாகனத் தொகுப்பை நவீனமயமாக்கும் நோக்கிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்திடும் விதமாகவும் நடப்பு நிதியாண்டில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு மொத்தச் செலவு ஒப்பந்த (Gross Cost Contract) முறையின் கீழ், 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்திடவும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
Chennai Ac New Buses3/5

போக்குவரத்து கழகங்களில் உள்ள பேருந்துகளில் புதிய வசதிகள்

இதன்மூலம் சென்னையின் பொதுப் போக்குவரத்து சேவை நவீனமயமாக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட்டு, பயணிகளுக்கு மேம்பட்ட மற்றும் வசதியான போக்குவரத்து சேவை கிடைக்க வழிவகை ஏற்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகளை பொருத்தும் பணிக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
TNSTC Buses4/5

பேருந்துகளில் கண்காணிப்புக் கருவிகள், அவசர உதவி பொத்தான்கள்

பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், இயக்கத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் (Vehicle Location Tracking Device) மற்றும் அவசர உதவி பொத்தான்களைப் (Panic Buttons) பொருத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. AIS 140 தரநிலையிலான இக்கருவிகள் மையக் கண்காணிப்பு அமைப்புடன் (Central Contral Centre) இணைக்கப்படும். இதன் மூலம் பேருந்தின் இருப்பிடம், இயக்க வேகம், நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படுதல் மற்றும் அவசர எச்சரிக்கைகள் ஆகியவற்றை நிகழ்நேரத்தில் கண்காணிக்க இயலும்.
TNSTC Buses5/5

பேருந்துகளில் புதிய வசதிகளுக்கு ரூ.17.99 கோடி விடுவிப்பு

எட்டு போக்குவரத்துக் கழகங்களின் 13,490 வாகனங்களில் இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகளும், 13,776 அவசர உதவி பொத்தான் தொகுப்புகளும் பொருத்திட ஏதுவாக முதல்வர் விஜய் போக்குவரத்து கழங்களுக்கு ரூ.17.99 கோடி விடுவிக்க ஒப்புதல் வழங்கியுள்ளார். பயணிகளின் பாதுகாப்பு, அவசரகால உதவி மற்றும் இயக்கக் கண்காணிப்பை ஒருங்கிணைக்கும் இந்த நடவடிக்கை, மகளிர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ள வழிவகுக்கும்.
TAGS:
Chennai

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
விலகினார் ஜென்சன் ஹுவாங்... Nvidia அடுத்த சிஇஓ யார்? ரேஸில் இருக்கும் ஜெய் பூரி யார்?

விலகினார் ஜென்சன் ஹுவாங்... Nvidia அடுத்த சிஇஓ யார்? ரேஸில் இருக்கும் ஜெய் பூரி யார்?

2

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

3

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

4

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

5

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.