• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /கோவையில் DJ பார்ட்டிகளுக்கு தடை... கறார் காட்டும் காவல்துறை... காரணம் என்ன?

கோவையில் DJ பார்ட்டிகளுக்கு தடை... கறார் காட்டும் காவல்துறை... காரணம் என்ன?

Written BySudharsan G
Published: Sep 11, 2026, 07:00 PM IST|Updated: Sep 11, 2026, 07:07 PM IST
joinshare
கோயம்புத்தூர் மாநகரில் DJ பார்ட்டிகளுக்கு தற்காலிக தடை விதித்து கோவை போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து விரிவாக இங்கு அறிந்துகொள்ளலாம்.

கோவை மாநகரில் DJ பார்ட்டிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற கூட்டங்களில் DJ ஆர்ப்பரேட்டர்கள், பார் மற்றும் கிளப் உரிமையாளர்களிடம் அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் வரை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Pub DJ Party1/5

கோவையில் டிஜே பார்ட்டிகளுக்கு தடை

கோவை மாநகரில் பல்வேறு மதுபான பார்களிலும், கிளப்களிலும் ஆடல், பாடலுடன் கூடிய DJ பார்ட்டிகளுக்கு நடத்தப்பட்டு வந்த சூழலில், கோவை போலீசார் திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதன்படி, கோவையில் DJ பார்ட்டிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. (AI Generated Image: ChatGPT)
Pub DJ Party2/5

அனுமதியில்லாத பார்ட்டிகளில் வன்முறை

இதுகுறித்து மூத்த அதிகாரிகள் கூறுகையில், ஒரு சில FL3 மற்றும் FL2 உரிமம் பெற்ற பார்கள், கிளப்கள் காவல்துறையிடம் உரிய அனுமதியின்றி DJ பார்ட்டிகளை நடத்தி வருவது போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த பார்ட்டிகளின் போது சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன. இதனாலேயே தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (AI Generated Image: Gemini)
Pub DJ Party3/5

பீளமேடு FL2 கிளப்பிற்கு சீல் வைத்த கோவை போலீசார்

பீளமேடு அருகே உள்ள கிளப் ஒன்றில் இதுபோன்ற DJ பார்ட்டியின் போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. அதைத் தொடர்ந்து, FL2 உரிமம் பெற்ற அந்த கிளப்பிற்கு போலீசார் கடந்த செவ்வாய்கிழமை அன்று (செப். 8) சீல் வைத்தனர். இதைத் தொடர்ந்து, கிளப் மற்றும் பார் உரிமையாளர்களுடன் கோவை மாநகர போலீசார் கூட்டம் ஒன்றை நடத்தினர். (AI Generated Image: Gemini)
Pub DJ Party4/5

DJ பார்ட்டிகள் தடை - என்ன விளைவுகள் வரும்...?

கூட்டத்தின் போது, போலீசாரின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு கிளப் மற்றும் பார்களின் உரிமையாளர்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் என் கண்ணன் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். பொதுவாக பண்டிகை நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இரவு நேரத்தில் DJ பார்ட்டிகள் ஏற்பாடு செய்யப்படும். தற்போது இந்த பார்ட்டிகளுக்கு தடை விதித்ததன் மூலம் பப்கள், பார்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. (AI Generated Image: Gemini)
Pub DJ Party5/5

கோவை மாநகர காவல்துறை அதிகாரி தகவல்

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவையில் FL3 உரிமம் பெற்ற பெரும்பாலான நட்சத்திர ஹோட்டல்கள் காவல்துறையிடம் அனுமதி பெற்ற பின்னரே DJ பார்ட்டிகளை ஏற்பாடு செய்கின்றன. ஆனால், இந்த தொழிலுக்கு புதிதாக வரும் சிலர், காவல்துறையின் அனுமதியின்றி இத்தகைய பார்ட்டிகளை நடத்தியதால், மோதல்களும் தேவையற்ற சிக்கல்களும் ஏற்பட்டன. இதை தவிர்க்கவே பார்களில் DJ பார்ட்டிகளை நடத்த தற்காலிக தடை விதித்துள்ளோம்" என்றார். (AI Generated Image: ChatGPT)
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.