சிஎஸ்கேவின் பங்குகள் விவகாரத்தில் தோனிக்கும், அணி நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சிஎஸ்கேவின் சிஇஓ காசி விஸ்வநாதன் இத்தகவலை முற்றிலும் மறுத்துள்ளார்.
தோனி 2008ஆம் ஆண்டில் இருந்து சிஎஸ்கேவின் அங்கமாக இருந்து வருகிறார். 2016, 2017 ஆகிய சீசன்களை தவிர்த்து 2008 முதல் 2025 வரை தொடர்ச்சியாக அனைத்து சீசன்களிலும் விளையாடினார். அந்த 2 சீசன்களிலும் ரைஸ்ஸிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக விளையாடினார். 2026ஆம் ஆண்டில் அவர் காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட நிலையில், கடைசி சில போட்டிகளை செட்டாகிய காம்பினேஷனை கலைக்க வேண்டாம் என்பதற்காக அவர் விளையாடாமல் தவிர்த்தார் என கூறப்பட்டது. எனவே 2026 சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இவர் தலைமையில் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளையும், CLT20 தொடரில் 2 கோப்பைகளையும் சிஎஸ்கே வென்றிருக்கிறது.
1/5
எம்எஸ் தோனி
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 கோப்பையை வென்றுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கு பிறகு 2024, 2025, 2026 என மூன்று சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லவில்லை. அதுமட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக தொடர்ச்சியாக 3 முறை பிளேஆப் வராமல் இருந்தது, சிஎஸ்கே. இந்நிலையில், 19 ஆண்டுகளா சிஎஸ்கே உடன் பயணித்த ஸ்டீபன் பிளமிங் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார்.
2/5
எம்எஸ் தோனி
முன்னதாக கடந்த சீசனில் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. காயத்தில் இருந்து குணமடைந்தும் அவர் விளையாடாமல் இருந்தார். இந்நிலையில், அவர்தான் இனி சிஎஸ்கேவை முழுமையாக வழிநடத்தப் போகிறார். தனக்கு ஏற்ற ஒரு தலைமை பயிற்சியாளரை அணிக்குள் கொண்டுவந்து, தோனி ஆலோசகராக செயல்படுவார் என தகவல்கள் வந்தன.
3/5
எம்எஸ் தோனி
இதற்கிடையே சமீபத்தில் தோனிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிந்தன. அதாவது, தோனி சிஎஸ்கேவின் பங்குகளில் 25% முதலில் கேட்டதாகவும், பின்னர் 20% ஆக குறைத்து கேட்டதாகவும்; ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் 5.5% பங்குகளை மட்டுமே கொடுக்க முடியும் என கூறியதாக தகவல்கள் வந்தன. இவை எதுவும் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தன.
4/5
எம்எஸ் தோனி
இந்நிலையில், PTI ஊடகத்திற்கு சிஎஸ்கேவின் சிஇஓ காசி விஸ்வநாதன் அளித்த பேட்டியில், பரவும் வதந்திகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றார். இதன்மூலம் பரவிய தகவல் முற்றிலும் மறுக்கப்பட்டு, சிஎஸ்கேவும் தோனிக்கும் எவ்வித முரணும் இல்லை என்பதை தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் 2027 ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என அவர் தோனி இதுவரை கூறவில்லை என்று காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
5/5
எம்எஸ் தோனி
இதுகுறித்து காசி விஸ்வநாதன் விரிவாக கூறுகையில், "நாங்கள் இதுவரை தோனியுடன் எதுவும் விவாதிக்கவில்லை. தோனி தனது முடிவுகளை தானே எடுப்பவர், நாங்கள் அதை மதிக்கிறோம். வீரராகவோ, பயிற்சியாளராகவோ அல்லது ஆலோசகராகவோ அவர் எந்த பதவியை விரும்பினாலும், சிஎஸ்கேவில் ஒரு நிரந்தர அங்கமாக வைத்திருக்கவே நாங்கள் எப்போதும் விரும்புவோம். எந்த முடிவும் அவரை பொறுத்ததுதான். அடுத்த சீசனில் தோனி அணியில் இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இப்போதைய சூழலில், ஆடுகளத்திற்கு வெளியே உள்ள வாழ்க்கையை தோனி மகிழ்ச்சியாக கழித்து வருவதாக தெரிகிறது" என்றார்.