• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /முரசு புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம்!

முரசு புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம்!

Written ByR Balaji
Published: Oct 31, 2026, 05:31 PM IST|Updated: Oct 31, 2026, 05:35 PM IST
joinshare

வங்கக்கடலில் உருவாகும் 'முரசு' புயல் ஆந்திராவை நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு பெரிய பாதிப்பில்லை என்றும், சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மிதமான மழை மட்டுமே பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
 

TN Weather1/5

முரசு புயலால் சென்னைக்கு பாதிப்பா?பிரதீப் ஜான் விளக்கம்

வங்கக்கடலில் உருவாகி வரும் முரசு புயல் ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இருப்பினும், நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
TN Weather2/5

ஆந்திராவுக்கு அதிகனமழை வாய்ப்பு

முரசு புயல் வலுப்பெற்று நகரும்போது தெற்கு மற்றும் மத்திய ஆந்திர பிரதேச கடலோர பகுதிகளில் அதிகனமழை பெய்யக்கூடும் என பிரதீப் ஜான் கணித்துள்ளார். புயலின் நகர்வு பாதை ஆந்திராவை நோக்கி இருப்பதால், அதிகப்படியான மழைப்பொழிவு அந்த பகுதிகளிலேயே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
TN Weather3/5

சென்னை, திருவள்ளூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை பொறுத்தவரை நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக பிரதீப் ஜான் கூறி உள்ளார்.
TN Weather4/5

வட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்யுமா?

புயல் ஏற்படுத்தும் வளிமண்டல மாற்றங்கள் காரணமாக வட தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். அதேசமயம், உள் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
TN Weather 5/5

முரசு புயலால் அதிக மழைபொழிவு இருக்குமா?

முரசு புயலால் தமிழகத்தில் மிக அதிகமான மழைப்பொழிவு இருக்காது என பிரதீப் ஜான் கணித்துள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆந்திர கடலோர பகுதிகளில்தான் கனமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை மட்டுமே எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
3 தமிழக வீரர்களுக்கு CSK குறி.. யாரெல்லாம் தெரியுமா? இவர் வந்தா நல்லா இருக்கும்!

3 தமிழக வீரர்களுக்கு CSK குறி.. யாரெல்லாம் தெரியுமா? இவர் வந்தா நல்லா இருக்கும்!

2

தீபாவளியில் உருவாகும் மங்களகரமான யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. பொற்காலம் ஆரம்பம்

3

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்: நாளை முதல் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

4

'தூஸ்ரா' படத்திற்கு எதிராக சவுரவ் கங்குலி வழக்கு.. பின்னணி என்ன? Explained

5

ரூ.200க்கு 10 மளிகைப் பொருட்கள்.. ரேஷன் அட்டை இல்லாமல் வாங்க முடியுமா? முக்கிய அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.