• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /அரசு ஊழியர்களுக்கு 2 பரிசுகள்? டிஏ உயர்வு, போனஸ் வரம்பில் ஏற்றம்.... AIDEF முக்கிய கோரிக்கை

அரசு ஊழியர்களுக்கு 2 பரிசுகள்? டிஏ உயர்வு, போனஸ் வரம்பில் ஏற்றம்.... AIDEF முக்கிய கோரிக்கை

Written BySripriya Sambathkumar
Published: Oct 13, 2026, 05:14 PM IST|Updated: Oct 13, 2026, 05:19 PM IST
joinshare
Central Government Employees Bonus: இந்த தீபாவளிக்கு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் கூடுதல் போனஸ் என இரட்டைப் பரிசு கிடைக்குமா? ஊழியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்குமா மத்திய அரசு?

Central Government Employees DA Hike: அகவிலைப்படி உயர்வை விரைவில் அறிவிக்குமாறும், ஊழியர்களுக்கான போனஸ் வரம்பை உயர்த்துமாறும் 'அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் கூட்டமைப்பு' (AIDEF) அரசை வலியுறுத்தியுள்ளது. 2025-26 நிதியாண்டு முதல் போனஸை நிர்ணயிப்பதற்கு எந்தக் குறைந்தபட்ச ஊதிய அளவுகோலைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் நிதி அமைச்சகம் விளக்கம் கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Central Government Employees DA Hike1/9

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு

8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வுதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 2026 முதல் அமலுக்கு வரவுள்ள அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) உயர்வுக்கான அறிவிப்பு கூடிய விரைவில் வரக்கூடும்.
AIDEF2/9

அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் கூட்டமைப்பு

அகவிலைப்படி உயர்வை விரைவில் அறிவிக்குமாறும், ஊழியர்களுக்கான போனஸ் வரம்பை உயர்த்துமாறும் 'அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் கூட்டமைப்பு' (AIDEF) அரசை வலியுறுத்தியுள்ளது. அக்டோபர் 10, 2026 அன்று, AIDEF அமைப்பு அமைச்சரவைச் செயலாளர், நிதி அமைச்சகம் (செலவினத் துறை), பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆகியவற்றிற்கு ஒரு கடிதம் எழுதியது.
AIDEF Letter3/9

AIDEF கடிதம்

AIDEF கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டதாவது: தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. "இதன் விளைவாக, அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை அறிவிப்பதில் ஏற்படும் தாமதம், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிதி நிலையைப் பாதிப்பதோடு, அவர்களின் கவலையையும் அதிகரிக்கிறது."
When will Dearness Allowance Increase4/9

ஊழியர்களுக்கான அகவிலைப்படி எப்போது அதிகரிக்கும்?

அரசு ஆண்டுக்கு இருமுறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை அதிகரிக்கிறது. இந்த உயர்வு 'அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு' (AICPI-IW) தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்கள் 60% அகவிலைப்படியைப் பெறுகின்றனர்.
Dearness Allowance Increase5/9

அகவிலைப்படி அதிகரிப்பு

ஜூன் மாதத்திற்கான AICPI-IW தரவுகளின் அடிப்படையில், அகவிலைப்படி 3% அதிகரித்து 63%-ஐ எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரே இறுதி முடிவு தெரியவரும். இத்தகைய அறிவிப்புகள் பொதுவாகப் பண்டிகைக் காலங்களில் வெளியிடப்படுகின்றன. நவராத்திரி முடியும் முன்னர் இந்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Demand to Hike Bonus Limit6/9

போனஸ் வரம்பை ₹7,000-லிருந்து ₹21,000-ஆக உயர்த்தக் கோரிக்கை

அகவிலைப்படி (DA) உயர்வுடன் சேர்த்து, செயல்திறன் சார்ந்த போனஸ் வரம்பை ₹7,000-லிருந்து ₹21,000-ஆக உயர்த்தவும் AIDEF அமைப்பு வலுவாகக் கோரியுள்ளது. தற்போது, ​​கெஜட் அல்லாத மத்திய அரசு ஊழியர்கள் ஆண்டுதோறும் தசரா பண்டிகையின் போது (இந்த ஆண்டு அக்டோபர் 20 அன்று வருகிறது) போனஸ் பெறுகின்றனர்.
AIDEF on Bonus7/9

போனஸ் பற்றி AIDEF அமைப்பு கூறியது என்ன?

"அரசு குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் சுமார் ₹21,000-ஆக உயர்த்தியுள்ளதால், போனஸ் கணக்கீட்டிற்கான உச்சவரம்பையும் ₹7,000-லிருந்து ₹21,000-ஆக உயர்த்த வேண்டும்." என AIDEF கோரியுள்ளது. தேசிய கவுன்சில்-JCM (NC-JCM)-இன் படி, 7-வது ஊதியக் குழுவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை விட போனஸ் வரம்பு குறைவாக இருக்கக்கூடாது என்று அந்த அமைப்பு வலியுறுத்துகிறது. அதாவது, ₹18,000 + 58% அகவிலைப்படி (DA) என்பது, நவம்பர் 25, 2025 நிலவரப்படி ₹10,440-க்கு சமமாகும்.
Bonus Limit Hike8/9

போனஸ் வரம்பை உயர்த்துவதால் என்ன பயன்?

அரசு இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், ஊழியர்களின் போனஸ் தொகையில் மூன்று மடங்கு உயர்வு ஏற்படும். தற்போதைய வரம்பில் (₹7,000): ஆண்டு போனஸ் சுமார் ₹6,908-ஆக அமைகிறது. கணக்கீடு: ₹7,000 / 30.4 x 30. புதிய வரம்பில் (₹21,000): போனஸ் தொகை சுமார் ₹20,724-ஆக உயரும். கணக்கீடு: ₹21,000 / 30.4 x 30
Finance Ministry9/9

விளக்கம் கோரிய நிதி அமைச்சகம்

2025-26 நிதியாண்டு முதல் போனஸை நிர்ணயிப்பதற்கு எந்தக் குறைந்தபட்ச ஊதிய அளவுகோலைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் நிதி அமைச்சகம் விளக்கம் கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீபாவளிக்கு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் கூடுதல் போனஸ் என இரட்டைப் பரிசு கிடைக்குமா என்பதை அறிய அரசு ஊழியர்கள் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையை உற்றுநோக்குகின்றனர்.
TAGS:
Dearness Allowance

Trending

  • News
  • Photos
  • Videos
மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா... பிரதமர் மோடிக்கு கடிதம் - திடீர் அறிவிப்பு

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா... பிரதமர் மோடிக்கு கடிதம் - திடீர் அறிவிப்பு

2

Explained: 300 ஆண்டுகள் வரலாறு.. ஜந்தர் மந்தர் போராட்ட களமாக மாறியது எப்படி?

3

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு: கை நிறைய சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?

4

மின்சார கொள்முதல் சர்ச்சை: நீக்கப்பட்ட ஒரு பதிவு... தமிழக அரசியலில் வெடித்த புதிய விவாதம்

5

மீண்டும் காயத்தில் சிக்கிய CSK வீரர்... 3-4 வாரங்கள் விளையாட முடியாது - என்னாச்சு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.