• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /“மீண்டும் சிஎஸ்கேவுக்கே எடுத்திருப்பேன்”.. ஜெகதீசனிடம் மனம் திறந்த தோனி!

“மீண்டும் சிஎஸ்கேவுக்கே எடுத்திருப்பேன்”.. ஜெகதீசனிடம் மனம் திறந்த தோனி!

Written ByR Balaji
Published: Sep 01, 2026, 21:53 IST|Updated: Sep 01, 2026, 21:56 IST
joinshare

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த காலத்தில் தனக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், அந்த அணியின் முன்னாள் கேப்டன் தோனி தன்னிடம் பேசிய விதத்தை இப்போது நெகிழ்ச்சியுடன் நாராயண் ஜெகதீசன் நினைவுகூர்ந்துள்ளார்.
 

IPL1/6

ஐபிஎல்

தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜெகதீசன், 2018 முதல் 2022 வரை சிஎஸ்கே அணியின் ஒரு பகுதியாக இருந்தார். ஐந்து ஆண்டுகள் அணியில் இருந்தபோதிலும், அவரால் வெறும் 7 போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. 2020ல் 5 போட்டிகளிலும், 2022ல் 2 போட்டிகளிலும் அவர் களமிறங்கினார்.
IPL2/6

ஐபிஎல்

2022 சீசனுக்குப் பிறகு சிஎஸ்கே அவரை விடுவித்தது. இதையடுத்து 2023 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த சீசனில் 6 போட்டிகளில் களமிறங்கிய ஜெகதீசன் 89 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பிறகு நடைபெற்ற ஐபிஎல் ஏலங்களில் அவர் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படவில்லை.
IPL3/6

ஐபிஎல்

சிஎஸ்கேவில் இருந்து தான் விடுவிக்கப்பட்டது குறித்து யாரும் தன்னிடம் நேரடியாக விளக்கவில்லை என்று ஜெகதீசன் தெரிவித்துள்ளார். ஆனால், அடுத்த ஆண்டு கேகேஆர் அணிக்காக சிஎஸ்கேவை எதிர்த்து விளையாடியபோது தோனி தன்னை தனியாக அழைத்து பேசியதாக கூறியுள்ளார்.
IPL4/6

ஐபிஎல்

"சிஎஸ்கே அணியிலிருந்து நான் விடுவிக்கப்படப் போகிறேன் என்று யாரும் என்னிடம் தனியாக சொல்லவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு கேகேஆர் என்னை எடுத்தது. சிஎஸ்கேவுக்கு எதிரான ஒரு போட்டிக்குப் பிறகு மஹி பாய் என்னை டிரஸ்ஸிங் ரூமுக்கு அழைத்தார். சுமார் 25 நிமிடங்கள் என்னுடன் பேசினார். வேறு எந்த அணியும் உன்னை ஏலத்தில் எடுக்கவில்லை என்றால், நான் உன்னை மீண்டும் சிஎஸ்கே அணிக்கே எடுத்திருப்பேன் என்று அவர் சொன்னார்" என ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
IPL5/6

ஐபிஎல்

"நீங்கள் ஐந்து ஆண்டுகள் எங்களுடன் இருந்தீர்கள். ஆனால் உங்களுக்கு போதுமான வாய்ப்புகளை எங்களால் கொடுக்க முடியவில்லை. அதனால் வேறு அணியில் உங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே உங்களை விடுவித்தோம் என்று தோனி விளக்கினார். தோனி போன்ற ஒரு ஜாம்பவான் என்னிடம் இப்படி பேசியது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அவர் என்னிடம் நேரடியாக பேசி, இந்த முடிவுக்கான காரணத்தை விளக்கியது எனக்கு மிகவும் முக்கியமான விஷயம்" என்று ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
IPL6/6

ஐபிஎல்

"சிஎஸ்கே அணியில் நான் விளையாடியதை விட இன்னும் அதிகமான போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் என்று உண்மையாகவே நினைக்கிறேன். ஆர்சிபிக்கு எதிரான எனது அறிமுகப் போட்டியில் 33 ரன்கள் எடுத்தேன். நல்ல தொடக்கம் கிடைத்திருந்தாலும், அடுத்த போட்டியிலேயே என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள். அதன்பிறகு அணியில் இடம் கிடைப்பதும், வெளியேறுவதுமாக இருந்தது. அடுத்த சீசனில் ஒரு போட்டியில் கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சிஎஸ்கே எனக்கு இன்னும் கொஞ்சம் ஆதரவு கொடுத்திருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.
TAGS:
IPL

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.