Dhruv Vikram : பைசன் படம் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த துருவ் விக்ரமின் அடுத்தப் பட அப்டேட் இன்று வெளியாகிறது.
Dhruv Vikram : விக்ரமின் மகனான துருவ் விக்ரம் அடுத்ததாக எந்தப் படத்தில் நடிக்கிறார்? என்ற சஸ்பென்ஸ் நீடித்து வந்த நிலையில் சுடச்சுட புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
1/6
துருவ் விக்ரமின் புதிய படம்
பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2/6
இயக்குநர் யார் தெரியுமா?
அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது.
3/6
உதவி இயக்குநர் டூ இயக்குநர்
பிரம்மன், ஆதித்யா வரமா படங்களில் உதவி இயக்குநராக இருந்த கரண் அரவிந்த் குமார் கருப்பு படத்துக்கு கதை எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் துருவ் நடிக்கும் படம் பல வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டது.
4/6
சந்தோஷ் நாராயணன் இசை
பைசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு துருவ் எந்தப் படத்திலும் இணையாமல் இருக்கிறார். இந்த நிலையில், இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
5/6
இன்று வெளியாகும் அறிவிப்பு
தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி தமிழிலும் தற்போது படங்களைத் தயாரித்து வருகிறது. இந்தப் படம் தமிழில் 4ஆவதாக உருவாகிவருகிறது.
6/6
காதல் - அடிதடி தொடர்பான படம்
இந்தப் படத்தின் முதல் போஸ்டர் செப்டம்பர் 13 ஆம் தேதி இன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. காதல் - அடிதடி தொடர்பான படமாக இருக்குமென இந்தப் போஸ்டர் மூலம் தெரியவந்துள்ளது.