Dindigul apprenticeship camp : திண்டுக்கல்லில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் பங்கேற்றால் மாதம் 12 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை பெற முடியும்.
Dindigul apprenticeship camp : திண்டுக்கலில் நடக்கும் தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1/5
திண்டுக்கல்லில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல்லில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் : திண்டுக்கல் நத்தம் ரோடு, குள்ளனம்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் அக்டோபர் 12 திங்கட்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
2/5
முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு
முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு : மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறை இணைந்து நடத்தும் இம்முகாமில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் முன்னணித் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற நபர்களைத் தேர்வு செய்யவுள்ளன.
3/5
மாத உதவித்தொகை சலுகை
மாத உதவித்தொகை சலுகை : இம்முகாம் மூலம் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு, மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.10,560 முதல் ரூ.12,000 வரை சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4/5
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? : அரசு மற்றும் தனியார் ஐடிஐ-களில் தேர்ச்சி பெற்று இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காதவர்கள் மற்றும் 8, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியுடைய இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி நேரில் பங்கேற்கலாம்.
5/5
நேரில் பங்கேற்க அழைப்பு
நேரில் பங்கேற்க அழைப்பு : விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 12 அன்று காலை 9 மணிக்குத் தேவையான சான்றிதழ்களுடன் குள்ளனம்பட்டி அரசு ஐடிஐ வளாகத்திற்கு நேரில் வருகை தரலாம்; கூடுதல் விவரங்கள் அறிய 0451-2970049 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்