இயக்குநரும் முதல்வர் விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அவர் அதில் தனக்கு காதலியாக வர வேண்டும் என்றால் என்ன தகுதி வேண்டும் என்று கூறியிருப்பது வைரலாகி வருகிறது.
முதல்வர் விஜய்யின் மகனாகவும், தமிழ் திரையுலகின் புதிய இயக்குநராகவும் இருப்பவர், ஜேசன் சஞ்சய். இவர் தன்னுடைய முதல் படமான சிக்மா படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் குறித்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் அவர், தனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் வேண்டுமென்றால் என்னென்ன தகுதி வேண்டும் என்பது குறித்து பேசியிருக்கிறார்.
1/5
ஜேசன் சஞ்சய்
இயக்குநர் ஜேசன் சஞ்சய், தன்னுடைய தாய்-தந்தை, தங்கை என அனைவர் குறித்தும் நேர்காணலில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதோடு, தனது சினிமா பயணம் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள் குறித்தும் பேசியுள்ளார்.
2/5
கேர்ள் ஃப்ரெண்ட்
ஜேசன் சஞ்சய், தனக்கு ஒரு பெண் கேர்ள் ஃப்ரெண்டாக வர வேண்டும் என்றால், அவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை பற்றி அந்த நேர்காணலில் பேசியிருந்தார். அது குறித்து இங்கு பார்ப்போம்.
3/5
சாகச குணம்
அந்த பெண்ணிற்கு உணவு ரொம்ப பிடிக்க வேண்டும் என்றும், அவர் தன்னை போல சாகச குணம் இருக்க வேண்டும் என்றும், அவர் தன்னைப்போல புது இடங்களை சுற்றி பார்க்க வேண்டும் என்று தோன்ற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் அந்த பெண்ணிற்கு நிதி சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
4/5
ஹெவி மெயிண்டெனென்ஸ்
அந்த பெண், ஹெவி மெயிண்டெனன்ஸ் ஆக இருக்க கூடாது என்று பேசியிருக்கிறார். மேலும், அந்த பெண் தமிழ் பாடல்கள் மற்றும் தமிழ் படங்கள் பார்க்க மாட்டார் என்றால் தனக்கு அவர் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இதற்கு காரணம், தான் ஏதாவது பட ரெஃபரன்ஸ் கொடுத்தால் அதை அவருக்கு தெரிவிக்கும் போது அது தெரியவில்லை என்றால் அங்கு வைப்-ஏ இருக்காது என்று கூறினார்.
5/5
ஜேசன்
தனக்கு எது முக்கியமோ அதை புரிந்து கொள்ளாத பெண் தனக்கு வேண்டாமென ஜேசன் தெரிவித்திருக்கிறார். மேலும், அவருக்காக தன்னால் மாற்றிக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.