சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றிருக்கிறது. இதையடுத்து, இந்த படத்தில் கேமியோவில் நடித்தவரை வைத்து நெல்சன் படம் இயக்கப்போவதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்கியவர், நெல்சன் திலீப்குமார். இந்த திரைப்படத்தில் கேமியோவில் பிரபல நடிகர் ஒருவர் நடித்திருந்தார். அவரை வைத்து தன் அடுத்த படத்தை நெல்சன் இயக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
1/5
ஜெயிலர் 2
சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி, வெற்றிபெற்ற படம், ஜெயிலர் 2. ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் எக்கச்சக்க கேமியோக்களும் இருந்தன.
2/5
ஜெயிலர் 2 கேமியோ
ஜெயிலர் 2 திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் இன்னொருவரும் கேமியோ ரோலில் நடித்தார்.
3/5
ஜெயிலர் 2 ரித்திக் ரோஷன்
ஜெயிலர் 2 படத்தில் ரித்திக் ரோஷன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில், அவர் ரோடி எனும் கேரக்டரில் நடித்திருந்தார். இவரை வைத்து நெல்சன் அடுத்து ஒரு பிளானை போட்டிருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
4/5
ரித்திக் ரோஷன் நெல்சன் படம்
ரித்திக் ரோஷனை வைத்து நெல்சன் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது ஆக்ஷன் படமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
5/5
ரித்திக் ரோஷன்
நெல்சன், ரித்திக் ரோஷன் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வெளியாகவில்லை. இருப்பினும் இது நடந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் பேசி வருகின்றனர்.