Diwali Rasi Palan: தீபாவளி முதல் வாழ்க்கையில் செல்வம் அதிகரிக்க, வெற்றிகள் குவிய, ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி உங்கள் ராசிக்கு ஏற்ற பொருட்களை வாங்கிப் பாருங்கள்!! எந்த ராசிக்கு எந்த பொருள்? இங்கே காணலாம்.
Diwali Rasi Palan: தீபாவளி பண்டிகை செல்வம், செழிப்பு மற்றும் நல்வாழ்வின் குறியீடாகக் கருதப்படுகிறது. வட இந்தியாவில், தீபாவளிக்கு முந்தைய நாள், அல்லது பெரும்பாலும் ஐப்பசி அல்லது கார்த்திகை மாத தேய்பிறை திரயோதசி நாளில் தன்தேரஸ் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி மற்றும் தன்தேரஸ் நாட்களில் தங்கம், வெள்ளி, பாத்திரங்கள் மற்றும் துடைப்பம் போன்ற பொருட்களை வாங்குவது வழக்கமாக உள்ளது. இந்த நாட்களில் ராசிக்கு ஏற்ப சில பொருட்களை வாங்குபது லட்சுமி அன்னையின் ஆசீர்வாதத்தைத் தொடர்ந்து கிடைக்கச் செய்யும் என்றும், வாழ்வில் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் அள்ளித் தரும் என்றும் நம்பப்படுகின்றது. சிறந்த பலன்களை பெற மேஷம் முதல் மீனம் வரை யார் எந்த பொருளை வாங்க வேண்டும் என இங்கே காணலாம்.
1/13
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் கிரகம். செவ்வாய் தைரியம், ஆற்றல் மற்றும் வீரத்தின் காரணியாகக் கருதப்படுகிறார். ஆகையால், மேஷ ராசியில் பிறந்தவர்கள் தீபாவளி, தன்தேராஸ் ஆகிய நாட்களில் சிவப்பு நிறத்திலான பொருட்களை வாங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. செப்புப் பாத்திரங்கள், தங்கம் அல்லது தானியங்களையும் வாங்கலாம்.
2/13
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சுக்கிரன் வசதி, அழகு மற்றும் செல்வச் செழிப்பின் காரணியாகக் கருதப்படுகிறார். ரிஷப ராசிக்காரர்கள், தீபாவளி, தன்தேராஸ் ஆகிய நாட்களில் வெள்ளி நாணயங்கள், ஆபரணங்கள் அல்லது வெள்ளை நிறப் பொருட்களை வாங்குவது சிறந்தது. அழகு அல்லது கலை சார்ந்த பொருட்களையும் நீங்கள் வாங்கலாம்.
3/13
மிதுனம்
கடக ராசியின் அதிபதி சந்திரன் ஆவார். சந்திரன் மனம், அமைதி மற்றும் உணர்ச்சிகளுடன் தொடர்புடைய கிரகமாக உள்ளார். இந்த ராசியில் பிறந்தவர்கள் வெள்ளி நாணயங்கள், முத்துக்கள், வெள்ளை நிறப் பொருட்கள் அல்லது எஃகு (ஸ்டீல்) பாத்திரங்களை வாங்குவது மங்களகரமானது. இது வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அதிகரிக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
4/13
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன் ஆவார். சந்திரன் மனம், அமைதி மற்றும் உணர்ச்சிகளுடன் தொடர்புடைய கிரகமாக உள்ளார். இந்த ராசியில் பிறந்தவர்கள் வெள்ளி நாணயங்கள், முத்துக்கள், வெள்ளை நிறப் பொருட்கள் அல்லது எஃகு (ஸ்டீல்) பாத்திரங்களை வாங்குவது மங்களகரமானது. இது வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அதிகரிக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
5/13
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். சூரியன் கௌரவம், தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலின் குறியீடாகக் கருதப்படுகிறார். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தீபாவளி, தன்தேரஸ் நாட்களில் தங்கம், செப்புப் பாத்திரங்கள், செப்புக் கலசம் அல்லது மஞ்சள் நிறப் பொருட்களை வாங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
6/13
கன்னி
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சுக்கிரன் சுகபோகங்கள், ஆடம்பரங்கள் மற்றும் செல்வச் செழிப்புக்கு காரணிகிரகமாக இருக்கிறார். துலாம் ராசிக்காரர்கள் தீபாவளி நாளில் வெள்ளி நாணயம், வைர ஆபரணங்கள் அல்லது லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானின் சிலைகளை வாங்குவது மிகவும் மங்கலகரமானதாகக் கருதப்படுகிறது. இது இல்லத்தில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
7/13
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சுக்கிரன் சுகபோகங்கள், ஆடம்பரங்கள் மற்றும் செல்வச் செழிப்புக்கு காரணிகிரகமாக இருக்கிறார். துலாம் ராசிக்காரர்கள் தீபாவளி நாளில் வெள்ளி நாணயம், வைர ஆபரணங்கள் அல்லது லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானின் சிலைகளை வாங்குவது மிகவும் மங்கலகரமானதாகக் கருதப்படுகிறது. இது இல்லத்தில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
8/13
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் கிரகம் ஆவார். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தீபாவளியில் செப்புப் பாத்திரங்களை வாங்குவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மேலும், வழிபாட்டிற்குத் தேவையான பொருட்கள் அல்லது 'குபேர யந்திரம்' வாங்குவதும் மங்கலகரமானதாக இருக்கும். இது நேர்மறை ஆற்றலை வளர்ப்பதுடன், இல்லத்தில் செல்வமும் வளமும் பெருக வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.
9/13
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். குரு பகவான் அறிவு, தர்மம் மற்றும் நற்பேறு ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறார். இந்த ராசியில் பிறந்தவர்கள் தீபாவளியன்று பித்தளைப் பாத்திரங்கள், வழிபாட்டிற்கான விளக்குகள் அல்லது தங்க நாணயங்களை வாங்குவது மங்கலகரமானது. உங்கள் வீட்டு பூஜை அறையில் வைப்பதற்காகப் புதிய பொருட்களை வாங்குவதும் நல்லது.
10/13
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தீபாவளி நாளில் புதிய துடைப்பம் வாங்குவது மங்கலகரமாகக் கருதப்படுகிறது. மேலும், எஃகு (ஸ்டீல்) பாத்திரங்கள் அல்லது அன்றாட பயன்பாட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதும் சிறப்பானது. இது இல்லத்தின் நிதி நிலையை மேம்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது.
11/13
கும்பம்
கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவான் தான். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தீபாவளி நாளில் வழிபாட்டுப் பொருட்கள், புதிய துடைப்பம், 'ஸ்ரீ யந்திரம்' அல்லது 'குபேர யந்திரம்' ஆகியவற்றை வாங்கலாம். இத்தகைய பொருட்களை வீட்டிற்குள் கொண்டு வருவது மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்பது நம்பிக்கை.
12/13
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். குரு பகவான் அறிவு, தர்மம், கல்வி, செல்வம் மற்றும் நற்பேறு ஆகியவற்றைக் குறிக்கிறார். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தீபாவளியன்று மல்லி விதைகளை (தனியா) வாங்குவது மங்கலகரமானதாகக் கருதப்படுகிறது. மேலும், லட்சுமி அன்னை மற்றும் விநாயகப் பெருமானின் சிலைகளை வாங்குவதும் மங்கலமானதாகக் கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் இல்லத்தில் செல்வமும் செழிப்பும் பெருகும் என்று நம்பப்படுகிறது.