• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /EPS ஓய்வூதியம் 3 மடங்கு அதிகரிக்கிறதா? நவம்பர் 19 EPFO CBT முக்கிய கூட்டம்

EPS ஓய்வூதியம் 3 மடங்கு அதிகரிக்கிறதா? நவம்பர் 19 EPFO CBT முக்கிய கூட்டம்

Written BySripriya Sambathkumar
Published: Nov 12, 2026, 10:21 AM IST|Updated: Nov 12, 2026, 10:36 AM IST
joinshare
EPS Monthly Pension Hike: EPF உறுப்பினர்கள் மற்றும் EPS ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. இபிஎஸ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் இன்னும் சில நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

EPS Pension Hike: தற்போது ரூ.1,000 ஆக உள்ள இபிஎஸ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கைகள் உள்ளன. எனினும், தற்போதுள்ள அதிகபட்ச மாத ஓய்வூதிய வரம்பே ரூ.7,500 ஆக உள்ளதால் இந்த கோரிக்கை நிறைவேற வாய்ப்பில்லை. மத்திய அரசும் EPFO-வும் இபிஎஸ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.3,000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

Central Board of Trustees1/9

மத்திய அறங்காவலர் குழு

EPF உறுப்பினர்கள் மற்றும் EPS ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி! நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஊழியர்களைப் பாதிக்கும் ஒரு முக்கிய முடிவு, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழுவின் (Central Board of Trustees) வரவிருக்கும் கூட்டத்தில் எடுக்கப்படலாம். இந்தக் கூட்டம் 2026-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
Minimum Monthly Pension2/9

குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம்

CBT கூட்டத்தில், EPS-95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ₹1,000-லிருந்து ₹3,000-ஆக உயர்த்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் இதற்கு முன்னால் 2024 ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்டது. அதற்கு பிறகு இதில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை.
Minimum Monthly Pension3/9

தற்போதைய குறைந்தபட்ச ஒய்வூதியம்

தற்போதைய குறைந்தபட்ச ஒய்வூதியம் ரூ.1,000 ஆக உள்ளது. ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இது மிகவும் குறைவான தொகையாக உள்ளது. இது முதிய ஓய்வூதியதாரர்களுக்குப் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
EPS Minimum Monthly Pension4/9

இபிஎஸ் குறைந்தபட்ச மாத ஒய்வூதியம்

இபிஎஸ் குறைந்தபட்ச மாத ஒய்வூதியத்தை அதிகரிப்பதற்கான இந்த புதிய முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டால், அது லட்சக்கணக்கான ஊழியர்களுக்கும் ஓய்வுபெற்றவர்களுக்கும் பெரும் நிவாரணமாக அமையும். இந்த மாற்றத்தால் யாருக்குப் பலன் கிடைக்கும், யாருக்குக் கிடைக்காது என்பதை இங்கே புரிந்துகொள்ளலாம்.
Who will benefit from EPF Pension Hike5/9

எந்த ஊழியர்களுக்குப் பலன் கிடைக்கும்?

நாடு முழுவதும் தற்போது குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியமான ₹1,000-ஐ மட்டுமே பெற்று வரும் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களே இதன் முதன்மைப் பயனாளிகளாக இருப்பார்கள். இபிஎஸ் ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஓய்வூதியத்திற்குரிய சேவையில் (pensionable service) இருந்திருக்க வேண்டும். மேலும், 58 வயதை அடைந்திருக்க வேண்டும்.
EPF Wage Ceiling Hike6/9

ஊதிய வரம்பு குறித்த நிலை என்ன?

PF மற்றும் EPS பங்களிப்புகளுக்கான ஊதிய வரம்பை அரசு சமீபத்தில் ₹15,000-லிருந்து ₹25,000-ஆக உயர்த்தியது. இந்த சாதகமான மாற்றம், எதிர்காலத்தில் ஓய்வுபெறப்போகும் ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கீடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது அவர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய காலத்தில் கூடுதல் நிதிப் பாதுகாப்பை வழங்கும்.
Who will not benefit from EPS Pension Hike7/9

இபிஎஸ் குறைந்தபட்ச ஊதிய உயர்வால் யாருக்குப் பலன் கிடைக்காது?

தங்கள் பணி காலத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஓய்வூதியத்திற்குரிய பணியைச் செய்யாத ஊழியர்கள், இந்த மாதாந்திர ஓய்வூதியத்திற்குத் தகுதி பெறமாட்டார்கள். மேலும், வேலையை விட்டு விலகும்போது 'படிவம் 10C' (Form 10C)-ஐச் சமர்ப்பித்து, தங்கள் ஓய்வூதிய நிதி இருப்பு முழுவதையும் திரும்பப் பெற்று, கணக்கை முடித்துவிட்டவர்கள், இந்த ஓய்வூதிய உயர்வை கோர முடியாது.
EPS Pensiioners8/9

புதிய உறுப்பினர்களுக்கான விதிகள் என்ன?

செப்டம்பர் 1, 2014 அன்று அல்லது அதற்குப் பிறகு முதன்முதலில் இபிஎஃப்ஓ (EPFO)-வில் சேர்ந்த, மற்றும் ஆரம்ப அடிப்படை ஊதியம் மாதம் ₹25,000-க்கு மேல் இருந்த பணியாளர்கள், இபிஎஸ்-95 (EPS-95) திட்டத்தின் கீழ் கட்டாய உறுப்பினர்களாக இருக்க தகுதி பெற மாட்டார்கள். இத்தகைய பணியாளர்களின் முழு பங்களிப்பும் அவர்களது வழக்கமான இபிஎஃப் (EPF) கணக்குகளில் மட்டுமே வரவு வைக்கப்படுகிறது.
How much will EPS Pension Increase9/9

இபிஎஸ் ஓய்வுதியம் எவ்வளவு அதிகரிக்கும்?

தற்போது ரூ.1,000 ஆக உள்ள இபிஎஸ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கைகள் உள்ளன. எனினும், தற்போதுள்ள அதிகபட்ச மாத ஓய்வூதிய வரம்பே ரூ.7,500 ஆக உள்ளதால் இந்த கோரிக்கை நிறைவேற வாய்ப்பில்லை. மத்திய அரசும் EPFO-வும் இபிஎஸ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.3,000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
TAGS:
Pay Commission

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.