• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /புதுச்சேரி, காரைக்கால் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! நவம்பர் 27-ல் குறைதீர்வு முகாம்

புதுச்சேரி, காரைக்கால் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! நவம்பர் 27-ல் குறைதீர்வு முகாம்

Written ByShiva Murugesan
Published: Nov 20, 2026, 17:17 IST|Updated: Nov 20, 2026, 17:24 IST
joinshare
Puducherry ESI Grievance Camp: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் ESI மற்றும் EPF தொடர்பான குறைகளை உடனடியாகத் தீர்க்கும் வகையில், வரும் நவம்பர் 27-ஆம் தேதி சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இடம், நேரம் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Puducherry ESI Grievance Camp: புதுச்சேரி இஎஸ்ஐ மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் நவம்பர் 27-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை புதுச்சேரி காந்திநகர் இஎஸ்ஐ கிளை அலுவலகத்திலும், காரைக்கால் விநாயக மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிறப்பு விழிப்புணர்வு மற்றும் குறைதீர்வு முகாம் நடைபெறுகிறது. இதில் தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டு தங்கள் ESI மற்றும் PF கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு காணலாம்.

ESI-EPF Grievance Redressal Camp in Puducherry and Karaikal1/6

புதுச்சேரி, காரைக்கால் ESI மற்றும் EPF குறைதீர்வு முகாம்

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பணியாற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு பயனுள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகம் (ESI) மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) இணைந்து நடத்தும் சிறப்பு விழிப்புணர்வு மற்றும் குறைதீர்வுக் கூட்டம் வரும் நவம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.
Where is the grievance camp held in Puducherry?2/6

புதுச்சேரியில் எங்கு குறைதீர்வுக் கூட்டம் நடைபெறும்?

~புதுச்சேரி இஎஸ்ஐ மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தச் சிறப்பு முகாம் நவம்பர் 27-ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை தொடர்ந்து நடைபெறும். புதுச்சேரியில் வசிக்கும் தொழிலாளர்கள் காந்திநகரில் அமைந்துள்ள இஎஸ்ஐ கிளை அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.
Where is the grievance camp held in Karaikal?3/6

காரைக்காலில் எங்கு குறைதீர்வுக் கூட்டம் நடைபெறும்?

காரைக்கால் பகுதி மக்களுக்காக காரைக்காலில் உள்ள விநாயக மிஷன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் 27-ம் தேதி அன்று காலை 10 மணிக்குத் முதல் மாலை 4 மணி வரை இஎஸ்ஐ குறைதீர்வுக் கூட்டம் நடைபெறும்.
Who can benefit from this grievance camp?4/6

யாருக்கெல்லாம் இந்த குறைதீர்வுக் கூட்டம் முகாம் பயனளிக்கும்?

தொழிலாளர்கள், காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் தொழில் முனைவோர் என அனைவருமே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இஎஸ்ஐ மருத்துவ அட்டை பெறுவதில் உள்ள தாமதம், மருத்துவச் செலவுகளைத் திரும்பப் பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பிஎஃப் கணக்கில் பெயர், பிறந்த தேதி திருத்தங்கள் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அலுவலகங்களுக்கு அலைவது வழக்கம். அத்தகைய சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், அதிகாரிகள் நேரடியாக மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற உள்ளனர்,
Instant resolution through the grievance redressal camp5/6

குறைதீர்வுக் கூட்டம் முகாம் மூலம் உடனடித் தீர்வு

மத்திய அரசின் 'நிதி ஆப்கே நிகத் 2.0' மற்றும் 'சுவிதா சமகம்' ஆகிய திட்டங்களின் கீழ் இந்த முகாம்கள் முன்னெடுக்கப்படுகின்றன. முகாமில் வழங்கப்படும் கோரிக்கை மனுக்கள் அதிகாரிகளால் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, முடிந்தவரை அன்றைய தினமே தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Documents required for the grievance camp6/6

குறைதீர்வுக் கூட்டம் முகாம்: என்னென்ன ஆவணங்கள் எடுத்து செல்ல வேண்டும்?

இந்தக் கூட்டத்திற்குச் செல்பவர்கள் தங்கள் இஎஸ்ஐ அடையாள அட்டை, யுஏஎன் (UAN) எண், ஆதார் அட்டை மற்றும் தங்களின் கோரிக்கை தொடர்பான ஆவணங்களின் நகல்களைக் கையில் எடுத்துச் செல்வது பணிகளை எளிதாக்கும்.
TAGS:
Puducherry

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

2

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

3

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

4

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

5

இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.