• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: கம்ப்யூட்டர், வாகன முன்பணம் இனி எளிது!

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: கம்ப்யூட்டர், வாகன முன்பணம் இனி எளிது!

Written ByKarthikeyan Sekar
Published: Nov 10, 2026, 09:15 PM IST|Updated: Nov 10, 2026, 09:20 PM IST
joinshare
Tamil Nadu government employee loan : தமிழக அரசு ஊழியர்களுக்கான முக்கிய அப்டேட், கம்ப்யூட்டர், வாகன முன்பணம் இனி எளிது. எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

Tamil Nadu government employee loan : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கம்ப்யூட்டர், வாகனம் உள்ளிட்டவைகளுக்கான முன்பணம் வாங்கும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

 

Tamil Nadu government employee loan1/6

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்

1. தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: தமிழக அரசு ஊழியர்கள் கம்ப்யூட்டர், இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்கள் வாங்குவதற்காக நீண்ட கால முன்பணம் (Long Term Advance) பெறுவதில் இருந்த சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இனி விண்ணப்பங்கள் மாதக்கணக்கில் காத்திருக்கத் தேவையின்றி, நவீன தொழில்நுட்ப வசதியுடன் விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு ஒரே கிளிக்கில் ஒப்புதல் அளிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
Tamil Nadu government employee loan2/6

பழைய முறைக்கு குட் பை

2. பழைய WebADI முறைக்கு குட் பை - முன்பு நடைமுறையில் இருந்த முறையில் முறையான ஒப்புதல் வழிமுறைகள் இன்றி விவரங்கள் WebADI வழியே பதிவேற்றப்பட்டன. ஒப்புதலுக்குப் பிறகு பணம் வழங்கும் பதிவுகளைத் தனியாகச் செய்வதோடு, நிதி ஒதுக்கீடு அதிகாரி கைமுறையாக DDO-வுக்கு
Tamil Nadu government employee loan3/6

புதிய டிஜிட்டல் நடைமுறை

3. IFHRMS-ல் புதிய டிஜிட்டல் நடைமுறை - இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரசாணைகள் G.O.220 மற்றும் G.O.223 ஆகியவற்றின் படி IFHRMS தளத்தில் முழுமையான தானியங்கி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP Version 1.0) வெளியிடப்பட்டு, ஒப்புதல் ஆணை உருவாக்கம் முதல் மையப்படுத்தப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடு வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
Tamil Nadu government employee loan4/6

புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

4. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - புதிய முறையின் கீழ், தொடங்குபவர் IFHRMS தளத்தில் ஊழியர் விவரம், முன்பண வகை மற்றும் பணம் வழங்கும் விவரங்களைப் பதிவு செய்து வரைவு ஆணையை ஒப்புதலுக்கு அனுப்புவார். அதை ஆய்வு செய்யும் அதிகாரி, ஊழியரின் தகுதி, தொகை வரம்புகள் மற்றும் ஆவணங்களை முழுமையாகச் சரிபார்த்த பின்னரே ஒப்புதல் அளிப்பார்; தவறுகள் ஏதேனும் இருப்பின் உரிய குறிப்புடன் திருப்பி அனுப்பப்படும்.
Tamil Nadu government employee loan5/6

தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி

5. முறைகேடுகள் மற்றும் தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி - அதிகாரி ஒப்புதல் அளித்த உடனே கணினி தானாகவே இறுதி ஆணையை உருவாக்கி பணம் வழங்கும் பதிவுகளையும் தயார் செய்துவிடும். அத்துடன் சம்பந்தப்பட்ட DDO-வுக்கு மையப்படுத்தப்பட்ட பட்ஜெட் மாற்றமும் தானாகவே தொடங்கும். இரட்டை பட்ஜெட் ஒதுக்கீடு அல்லது கூடுதல் ஒதுக்கீட்டைத் தடுக்கும் பாதுகாப்பு வசதிகள் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
Tamil Nadu government employee loan6/6

அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு

6. அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு - கைமுறைப் பணிகள் முழுமையாகக் குறைந்து, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய ஜெட் வேக பில் செயலாக்கத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே அடுத்த கட்டம் நகரும் என்பதால் முறைகேடுகள் தவிர்க்கப்படுகின்றன. அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான விரைவான கடன் வசதி சாத்தியமாகியுள்ளதால் இப்புதிய நடைமுறைக்கு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.