• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /கிண்டி சிறுவர் பூங்கா 3 நாட்களுக்கு மூடல்.. என்ன காரணம்? வெளியான முக்கிய அறிவிப்பு

கிண்டி சிறுவர் பூங்கா 3 நாட்களுக்கு மூடல்.. என்ன காரணம்? வெளியான முக்கிய அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Nov 27, 2026, 11:11 IST|Updated: Nov 27, 2026, 11:18 IST
joinshare
Guindy Childrens Park Closed: சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா அடுத்த மூன்று நாட்கள் அல்லது மறு உத்தரவு வரும் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

Guindy Childrens Park Closed: இன்று சில பறவைகள் உயிரிழநதுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்கா மூடப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பிற பறவைகள், விலங்குகளின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Guindy Childrens Park1/5

கிண்டி சிறுவர் பூங்கா மூடல்

சென்னை கிண்டில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா இடமாக கிண்டி தேசியப் பூங்கா உள்ளது. சுமார் 2.70 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில், பறவைகள், விலங்குகள் என பல உள்ளன. இதன் அருகிலேயே சிறுவர் பூங்கா மற்றும் பாம்புப் பண்ணை ஆகியவையும் செயல்படுகின்றன. இந்த பூங்காவுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். இந்த நிலையில், கிண்டி தேசியப் பூங்கா மூன்று நாட்கள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Guindy Childrens Park2/5

கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைகள் உயிரிழப்பு

இது தொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள நீர்வாழ் பறவைகள் அடைப்பிடத்தில் 27.11.2026 அன்று சில பறவைகள் உயிரிழந்துள்ளன. பறவைகளின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பரிசோதனைக்காக மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு (NIHSAD) அனுப்பப்பட உள்ளன. பறவைக் காய்ச்சல் தொற்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
Guindy Childrens Park3/5

நவம்பர் 28 முதல் 3 நாட்களுக்கு பூங்கா மூடல்

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிண்டி சிறுவர் பூங்கா 28.11.2026 முதல் 30.11.2026 வரை மூன்று நாட்களுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை பார்வையாளர்களுக்கு மூடப்படும். இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, பாதிக்கப்பட்ட அடைப்பிடத்தைத் தனிமைப்படுத்துதல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், தூய்மைப்படுத்துதல் மற்றும் உயிரிப் பாதுகாப்பு நடைமுறைகளைத் தீவிரமாகச் செயல்படுத்துதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Guindy Childrens Park4/5

கிண்டி சிறுவர் பூங்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பூங்காவில் உள்ள பிற பறவைகள் மற்றும் விலங்குகளின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே, நாளை முதல் மூன்று நாட்களுக்கு மக்கள் கிண்டி சிறுவர் பூங்கா செல்ல அனுமதி கிடையாது.
Guindy Childrens Park5/5

பறவைக் காய்ச்சல் எதிரொலி

பறவைக் காய்ச்சல் எனப் பொதுவாக அறியப்படும் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா, முதன்மையாகப் பறவைகளைத் தாக்கும் ஒரு வைரஸ் தொற்றாகும். H5N1 உட்பட சில வகை வைரஸ்கள், எப்போதாவது மனிதர்களையும் பாதிக்கக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதிக்கப்பட்ட பறவைகளுடன் தொடர்பைத் தவிர்ப்பதும் முக்கியமானதாகிறது. எனவே, கிண்டி சிறுவர் பூங்கா மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
TAGS:
Chennai

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
இராமாயணா ஓடிடி ரிலீஸ் எப்போது? சந்தா வைத்திருந்தாலும் பார்க்க முடியாது - அப்புறம் எப்படி?

இராமாயணா ஓடிடி ரிலீஸ் எப்போது? சந்தா வைத்திருந்தாலும் பார்க்க முடியாது - அப்புறம் எப்படி?

2

தொகுதி மறுவரையறையில் பாஜகவுக்கு திமுக ஆதரவா? வெளிப்படையாக சொன்ன ஸ்டாலின்!

3

தூத்துக்குடி: தமிழில் எழுத, படிக்க தெரியுமா? மாதம் ரூ.40,000 சம்பளத்தில் அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

4

தமிழகத்திற்குப் புதிய விரைவுச் சாலைகள் இல்லை: மத்திய அரசு அதிரடி முடிவு – பின்னணி என்ன?

5

லீவுக்கு ஊருக்கு வந்தவர் கொலை... பிரபல ரவுடியின் கொடூரச் செயல் - குமரியில் நடந்தது என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.